ரயில்வே திட்டங்களுக்கு ரூ.43,000 கோடி
துமகூரு: ''கர்நாடக ரயில்வே திட்டங்களுக்கு, மத்திய அரசு 43,000 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளது,'' என மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.துமகூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:மாநிலத்தின் சில ரயில்வே திட்டங்கள் கடந்த 1996லிருந்து அப்படியே இருந்தன. இந்த திட்டங்கள், எங்கள் அரசு காலத்தில் வகுக்கப்பட்டவை என, பிரதமர் நரேந்திர மோடி கூறவில்லை. திட்டங்களை செயல்படுத்த 43,000 கோடி ரூபாய் நிதி வழங்கினார். அவர் எப்போதும் பாரபட்சமாக நடந்து கொண்டது இல்லை.'ஒரு நாடு, ஒரு தேர்தல்' குறித்து, ஆலோசனை நடக்கிறது. வரும் லோக்சபா தேர்தல் கூட்டத்தில், இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஒரு நாடு, ஒரு தேர்தல் நடைமுறையால் பல நன்மைகள் உள்ளன. ஒரே நேரத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தல் நடந்தால் அனுகூலமாக இருக்கும்.பணம், நேரம் என, இரண்டும் மிச்சமாகும். மூன்று மாதம், ஆறு மாதம், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடந்தால், நாட்டின் செல்வம் தேவையின்றி வீணாகும்.இவ்வாறு அவர் கூறினார்.