உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூன்றாம் பாலினத்தவர் 44 பேருக்கு போக்குவரத்து உதவியாளர் பணி; இங்கல்ல, தெலுங்கானாவில்!

மூன்றாம் பாலினத்தவர் 44 பேருக்கு போக்குவரத்து உதவியாளர் பணி; இங்கல்ல, தெலுங்கானாவில்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில், மூன்றாம் பாலினத்தவர் 44 பேர் போக்குவரத்து உதவியாளராக பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஹைதராபாத் போக்குவரத்து காவல் துறையில் மூன்றாம் பாலினத்தவர் போக்குவரத்து உதவியாளர்களாக நியமிக்க முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டார். 'விண்ணப்பதாரர்களுக்கு 18 வயதுக்கு மேல், 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' என தகுதிகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.அதன்படி கோஷாமஹால் போலீஸ் மைதானத்தில் ஆள்சேர்ப்பு நடத்தப்பட்டது. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற உடற்தகுதி போட்டிகளில் மூன்றாம் பாலினத்தவர் 58 பேர் கலந்து கொண்டனர். இதில், 44 பேர் போக்குவரத்து உதவியாளராக பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 44 பேரில், 29 பேர் திருநங்கைகள், மீதமுள்ள 15 பேர் திருநம்பிகள்.ஆள்சேர்ப்பு நிகழ்ச்சியில் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் கலந்து கொண்டார். தேர்ந்தெடுக்கப்பட்டோர் தங்கள் சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். காவல் துறைக்கு நல்ல பெயரை கொண்டு வர வேண்டும் என போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் தெரிவித்தார். இது குறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சமூகத்தில் மரியாதை கிடைக்கும். ஹைதராபாத்தில் பரபரப்பான பகுதிகளில் போக்குவரத்தை நிர்வகிக்க அவர்கள் அனுப்பப்படுவார்கள். ஊர்க்காவல் படையினரைப் போல அவர்களது சேவையையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என்றனர்.அவர்களுக்கு ஊர்க்காவல் படையினரின் சம்பளத்துக்கு இணையான சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sundarsvpr
டிச 05, 2024 10:21

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குழந்தை [இறப்பு இருக்காது. இவர்களுக்கு ஓய்வு பயன்கள் இருக்கும். இவர்கள் வாரிசு தத்து எடுக்க உரிமை உண்டா? பலன்களை பயன்படுத்த விதிமுறை நிர்ணயம் செய்வது நல்லது.


Matt P
டிச 05, 2024 09:59

எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் கல்வி எல்லோருக்கு வேலை கிடைக்க வழி செய்வது தான் அரசின் கடமையாக இருக்க முடியும்.


சின்ன சேலம் சிங்காரம்
டிச 05, 2024 09:44

அப்படின்னா இனிமேல் சிக்னல் பிரச்சனை இருக்காது அப்படித்தானே


Bye Pass
டிச 05, 2024 11:08

கூவாகம் அடிக்கடி போவீங்களா


புதிய வீடியோ