உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 அரசு பள்ளிகளுக்கு பெயிண்ட் அடிக்க 443 பேர்; போலி ரசீதால் அம்பலமான மோசடி

2 அரசு பள்ளிகளுக்கு பெயிண்ட் அடிக்க 443 பேர்; போலி ரசீதால் அம்பலமான மோசடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்திய பிரதேசத்தில் 2 அரசு பள்ளிகளுக்கு பெயிண்ட் அடிக்க ஆன செலவு ரூ.3.38 லட்சம் என்று சமர்ப்பிக்கப்பட்ட ரசீதுகள் மூலம் மோசடி அம்பலமாகி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளது சகண்டி என்ற சின்னஞ்சிறிய கிராமம். இங்கு ஒரு அரசுப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள ஒரு சுவருக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டது. அதற்கான செலவினங்கள் எவ்வளவு என்பது பற்றிய விவரங்கள், ரசீதுகள் மூலமாக இணையத்தில் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.இந்த பள்ளிக்கு பெயிண்ட் அடிக்க மொத்தம் 4 லிட்டர் பெயிண்ட் பயன்படுத்தப்பட்டது. அதற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் என்ணிக்கை மட்டுமே 168 பேர். இவர்கள் தவிர, 65 கொத்தனார்களும் பணியில் இணைந்துள்ளனர். 133 பேர் சேர்ந்து தான் ஒரு சுவருக்கு பெயிண்ட் அடித்துள்ளனர். அதற்கான செலவு மட்டுமே ரூ. 1,06, 984. இப்படியான ஒரு ரசீதை அந்த பணியை செய்து முடித்த ஒப்பந்ததாரர் அரசிடம் சமர்ப்பித்துள்ளார். இதேபோன்று, நிபானியா என்ற ஊரில் உள்ள ஒரு அரசுப்பள்ளிக்கும் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. அங்கு 10 ஜன்னல்கள், நான்கு கதவுகளுக்கு பெயிண்ட் அடிக்க, 275 தொழிலாளர்களும்,150 கொத்தனார்களும் வேலை செய்திருக்கின்றனர். செலவு ரூ.2,31,685. மொத்தம் 20 லிட்டர் பெயிண்ட் பயன்படுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு 2 அரசுப் பள்ளிகளிலும் பெயிண்ட் அடிக்க 443 பேர் வேலை செய்திருக்கின்றனர். ரூ.3.38 லட்சம் செலவு பிடித்து இருக்கிறது. 24 லிட்டர் பெயிண்ட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கான பில்களை உரிய அரசு அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் அளித்துள்ளார்.இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்விரு பள்ளிகளில் பெயிண்ட் அடித்தது ஒரேயொரு நிறுவனம்தான். இந்த நிறுவனத்தின் பெயரில் தான் பில்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. அந்த ரசீதுகள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையாகி இருக்கிறது.விசாரணைக்கு உத்தரவு2 பள்ளிகளில் பெயிண்ட் அடிக்க இத்தனை ரூபாயா? எப்படி சாத்தியம்? என்ற கேள்விகளும் வெளியாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

lokeswaran shetty
ஜூலை 08, 2025 13:50

எங்க வீட்டிற்கு வெள்ளை அடிக்க 3.5 லட்சம் ஆனது... அவங்க சொன்னது மணி கணக்கில்... பரவாயில்ல..


Natarajan Ramanathan
ஜூலை 07, 2025 22:20

தூத்துக்குடியில் கழிசடை தொகுதி நிதியில் ஒரே ஒரு பேருந்து நிறுத்தம் அமைக்க 154 லட்சம் என்று கணக்கு காண்பித்து உள்ளாள்.


sasikumaren
ஜூலை 07, 2025 09:27

20 கோடி பணத்தை ஒதுக்கி ஒரு கோடியில் பாலம் கட்டி இரண்டு மாதங்களில் சரிந்து விழுந்தது அதை இங்குள்ள திருட்டு மாஃபியா கும்பல் போல ம.பிரதேசத்திலும் இருக்கிறதா ஆச்சரியமாக உள்ளது.


Mahendran Puru
ஜூலை 07, 2025 08:29

இதற்கெல்லாம் ED போகாது. ஏனென்றால் ஊழல் நடந்தது பாஜக ஆளும் ம பி யில்.


S.jayaram
ஜூலை 07, 2025 07:19

இப்படி கொள்ளை அடிக்கும் பணங்களை மீட்க வழியில்லையா? அல்லது அதற்கான சட்டங்கள் போதவில்லையா? அல்லது எல்லோரும் இப்படித்தான் என்ற கடந்து செல்வது தான் காரணமா? மாநில அரசு வைத்திருக்கும் கடன் 10 லட்சம் கோடி. மத்திய அரசு வைத்திருக்கும் கடன் 160 லட்சம் கோடி என்று மக்கள் மீது சுமத்தியுள்ளனர். இதை ஒரு குடிமகனாக ஏற்கமுடியாது என்று அறிவிக்க முடியாது. ஆட்சியாளர்களின் தவறான செலவினங்களால் ஏற்பட்டவையே இவை. என்று அந்த காலகட்ட ஆட்சியாளர்களின் மீது வழக்கு தொடர்ந்து நீதி கேட்க முடியுமா?


Rasheed Ahmed A
ஜூலை 07, 2025 12:39

தீர்வு : லட்சங்களில்/கோடிகளில் தேர்தலுக்கு செலவிடும் வேட்பாளர்களை/கட்சிகளை புறக்கணித்தாலே நேர்மையானவர்கள் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது.


Natarajan Ramanathan
ஜூலை 06, 2025 23:56

பாலம் கட்டாமலேயே கொள்ளை அடிப்பது, டாஸ்மாக்கில் ரசீது போடாமலேயே பணம் வாங்குவது எல்லாம் திராவிடமாடலில் மட்டுமே சாத்தியம். இந்தமாதிரி எல்லாம் அமெச்சூர்தனமாக மாட்டிக்கொள்ள மாட்டார்கள்.


G Mahalingam
ஜூலை 06, 2025 23:39

பாஜாக ஆட்சியில் நடவடிக்கை எடுப்பார்கள். பஸ் நிழல் குடை அமைக்க 38 லட்சம் செலவு செய்தாதக இருந்தது. திராவிட மாடல் ஆட்சியில் நடவடிக்கை இல்லை.


Pmnr Pmnr
ஜூலை 06, 2025 23:10

மன்னித்து விடுவது நல்லது


Sridhar Ramamoorthy
ஜூலை 06, 2025 22:24

வள்ளுவர் கோட்டம் , ஜெமினி பாலம் செலவு சரியாக இருக்கும்னு நம்புவோமாக .


rasaa
ஜூலை 06, 2025 22:22

பெயின்ட் அடிக்கும் முன்பு அந்த இடத்தை சுத்தம் செய்யவேண்டும். பலபேர் பலமுறை முயற்சிசெய்தும் அந்த இடங்கள் சுத்தமாகவில்லை. அதுதான் காரணம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை