உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபீசே இன்றி 474 லெட்டர்பேடு கட்சிகள் நீக்கம் ...

ஆபீசே இன்றி 474 லெட்டர்பேடு கட்சிகள் நீக்கம் ...

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாட்டில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத மற்றும் கட்சி அலுவலகம் இல்லாமல், 'லெட்டர்பேடு' மட்டும் அடிப்படையாக வைத்து இயங்கிய, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத, 474 அரசியல் கட்சிகளை நீக்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் செயல்பட்ட 42 'டுபாக்கூர்' கட்சிகளின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் - 1951 பிரிவு '29 ஏ'யின் படி, புதிதாக துவங் கும் அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்படும் கட்சிகள், ஆறு ஆண்டுகளில், நாட்டில் நடக்கும் ஏதாவது ஒரு தேர்தலில் போட்டியிட வேண்டும். இல்லையெனில், அவற்றின் பதிவுகள் நீக்கப்படும்.

நீக்கும் பணி

அப்படி போட்டியிடாத கட்சிகளை கண்டறிந்து நீக்கும் பணியை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. முதற்கட்டமாக, ஆக., 9ல், ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத, 334 அரசியல் கட்சிகளை தேர்தல் கமிஷன் நீக்கியது. அந்த வகையில், தற்போது இரண்டாம் கட்டமாக, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 474 அரசியல் கட்சிகளை தேர்தல் கமிஷன் நீக்கி உள்ளது. இதில் பெரும்பாலான கட்சிகள், அலுவலகம் இல்லாமல், 'லெட்டர்பேடு' மட்டும் அடிப்படையாக வைத்து இயங்கியவை. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 121; மத்திய பிரதேசம், மஹாராஷ்டிராவில் தலா 44; தமிழகத்தில் 42 மற்றும் டில்லியில் 40 அரசியல் கட்சிகளின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அறிவிப்பு

கடந்த இரு மாதங்களில் மட்டும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 808 அரசியல் கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, மூன்றாம் கட்டமாக, 359 அரசியல் கட்சிகளை நீக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதில், உ.பி.,யைச் சேர்ந்த 127 கட்சிகள் அடங்கும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே நிலவரப்படி, நாட்டில் 2,800க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப் படாத அரசியல் கட்சிகள் உள்ளன. இதில், 750 கட்சிகள் மட்டுமே, 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டன. மீதமுள்ள கட்சிகள், லெட்டர்பேடு அடிப்படையில் மட்டுமே இயங்குகின்றன. இவற்றை கண்டறிந்து களையெடுக்கும் பணியை தேர்தல் கமிஷன் தீவிரப் படுத்தி உள்ளது. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

c.mohanraj raj
செப் 20, 2025 15:41

சட்டத்தை திருத்த வேண்டும் இந்த நாட்டிற்கு இவ்வளவு கட்சிகள் தேவையில்லை என்றால் பிறகு எதற்கு கட்சி


duruvasar
செப் 20, 2025 15:23

அட ஈஸ்வரா கடைசியில் இப்படி ஆயீடுச்சே . குஷ்டமடா இல்லை கஷ்டமடா


சசிக்குமார் திருப்பூர்
செப் 20, 2025 13:12

மீண்டும் இதே பெயரில் கட்சியை பதிவு செய்ய அனுமதிக்க கூடாது. வெளியே அந்த பெயர்களை பயன்படுத்த கூடாது. சட்டசபையில் அவர்களை திமுக என்றே அழைக்கவும். தனியாக பேசவும் வாய்ப்பளிக்க கூடாது. இதில் லொடுக்குபாண்டி கார்த்திக் பெயர்களை காணோம்


Rathna
செப் 20, 2025 12:01

சாதி மற்றும் கட்ட பஞ்சாயத்து கட்சிகளை அழிக்க வேண்டியது கடமை. அவர்கள் தொழில் வளராமல், மீட்டர் வட்டி விட்டு, கலக்க்ஷன் செய்து சாதாரண தொழில் செய்வோரை அழிக்கின்றனர்


sasidharan
செப் 20, 2025 11:40

மிகவும் அருமையான செயல் . தடுக்கி விழுந்தால் ரோட்டுக்கு ஒரு கட்சி என்ற நிலைமையில்தான் தமிழ்நாடு உள்ளது. கடிவாளம் போடவேண்டும் இந்த மாதிரி லெட்டர் பாட் கட்சிகளுக்கு.


Barakat Ali
செப் 20, 2025 11:39

விசிக, பாமக ????


A.Kennedy
செப் 20, 2025 11:10

சந்தோஷம் தான், இருந்தாலும் கட்சியின் பெயர்களை வெளியிட்டு இருந்தால் பரம சந்தோஷமாக இருந்திருக்கும்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
செப் 20, 2025 11:09

அருமை அருமை. பேருக்கு கட்சி வைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தவர்களுக்கு ஆப்பு. இனி தேவையில்லாமல் அரசியல் கட்சி ஆரம்பிப்பவர்களுக்கும் ஆப்பு வைக்க வேண்டும்


duruvasar
செப் 20, 2025 09:52

லெட்டர் பேடு கூட இல்லாத மையங்களையம் நீக்கவேண்டும். அல்லது விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மாதிரி திமுகவிலாவது இணைந்துவிடவேண்டும். இப்போ என்ன பண்ணுவேங்களாம்...


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
செப் 20, 2025 08:49

எந்தெந்த கட்சிகள் நீக்கமென்று பெயரைப்போடுங்கப்பா


புதிய வீடியோ