உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கி ஊழியர்கள் போராட்டம்; 4 நாட்கள் சேவை முடங்கும் அபாயம்

வங்கி ஊழியர்கள் போராட்டம்; 4 நாட்கள் சேவை முடங்கும் அபாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், தொடர் விடுமுறை காரணமாக 4 நாட்கள் வங்கிகள் முடங்கும் அபாயம் எழுந்துள்ளது.பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மார்ச் 24, 25 தேதிகளில் 48 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தில் 8 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.போராட்ட அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், வங்கி பணிகள் 4 நாட்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதம் 2 மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை. இம்மாதத்தில் மார்ச் 22ம் தேதி 4வது சனிக்கிழமையாகும். அதற்கு மறுநாள்(மார்ச் 23) ஞாயிறு விடுமுறை.போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ள மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் வங்கிகள் இயங்காது. அந்த வகையில் ஒட்டுமொத்தமாக 4 நாட்கள் வங்கிகளில் சேவை இருக்காது. தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

தாமரை மலர்கிறது
மார் 18, 2025 19:03

போராட்டம் செய்யும் ஊழியர்களை இந்தியா முழுக்க பணிமாற்றம் செய்ய வேண்டும். தமிழகத்தில் வேலை செய்பவரை காஷ்மீருக்கு மாற்றுங்கள். பிஹாரில் வேலை செய்பவரை தமிழகத்திற்கு மாற்றுங்கள். போராட்டம் ஒரு மணி நேரத்தில் முடிவுக்கு வந்துவிடும். பிறகு அனைத்து வங்கிகளை தனியாரிடம் கொடுத்து விடுங்கள். அரசு வியாபாரம் செய்ய கூடாது. செய்தால், கோட்டாவில் உள்ளே நுழைந்து கைநிறைய பை நிறைய சம்பளம் பெற்று உழைக்காமல் லஞ்சம் வாங்கி உண்டு கொழுத்து போராட்டம் செய்ய போய்விடுவார்கள்.


R.Natatarajan
மார் 18, 2025 16:00

போராட்டத்தில் பங்கு பெரும் அனைவரின் சம்பளம் இரண்டு மடங்காக பிடிக்கப்பட்ட வேண்டும் . அவர்கள் சரிவிஸ்ல் இரண்டு நாள் கூட பட வேண்டும் இரண்டு நாள் முன் ஒய்வு அளிக்க பட வேண்டும்


அசோகன்
மார் 18, 2025 12:31

இது என்ன காங்கிரஸ் காலமா.. நெட் பாங்கிங் UPI என எளிதாக 24 மணி நேரமும் பண பரிவர்த்தனை செய்யலாம்...... ஸ்டிரைக் பண்ணினா பண்ணட்டும் பாஸ்.


sridhar
மார் 18, 2025 17:24

கூடவே RTGS , neft.


Ray
மார் 18, 2025 19:35

இது என்ன காங்கிரஸ் காலமா.. மாதத்துக்கு த்தனை முறை வேண்டுமானாலும் ATM இல் பணமெடுக்க.


visu
மார் 18, 2025 12:22

இவர்கள் ஒருவர் வாங்கும் ஊதியத்தை மூன்றாக பிரித்து 3 ஷிப்ட்டில் இளைஞர்களை பணியமர்த்தி 24 மணிநேரம் வங்கிகளை மக்கள் சேவைக்கு அற்பணியுங்கள் .நல்லது


Ramesh Sargam
மார் 18, 2025 11:59

வேலை நாட்களிலேயே வங்கி ஊழியர்கள் சோம்பேறிகள். இதில் இவர்கள் போராட்டம் வேறு செய்கிறார்கள். இவர்கள் வெட்டிக் கிழிப்பதற்கு அதிக சம்பளம், அதிக விடுப்பு, அதிக சலுகைகள் வேண்டுமாம்.


Ray
மார் 19, 2025 07:47

இப்போதே ரிலேஷன்ஷிப் எக்சிக்யூட்டிவ்ஸ் என்று பதின்மூன்றாயிரம் முதல் குறைந்த கூலிக்கு தினக்கூலிகளை நியமித்து அவர்கள்தான் ஓடி ஓடி மொத்த வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார்கள் என்றால் மிகையில்லை இந்த வேலைக்கு EWS கோட்டா இல்லை போகட்டும் இந்த ஆட்சியின் தாரக மந்திரமே தனியார் மயம்தான் ஏன் இந்திரா காந்தியால் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளை தனியார் மயமாக்கவில்லை காரணம் ஒன்றேதான் கார்ப்பரேட்டுகளுக்கு பதினாறு லக்ஷம் கோடிகளுக்குமேல் “வாராக் கடன்கள்” தள்ளுபடி செய்திருக்க முடியாதே அரசு கஜானாவில் மஞ்சள் குளிக்கத்தான்


MUTHU
மார் 18, 2025 11:48

8th pay commission செயலாக்கம் பெரும்பொழுது கீழ்நிலை ஊழியரின் குறைந்த பட்ச சம்பளம் கூட சாதாரணமாய் ஒரு லட்சம் தாண்டிவிடும். உடனே மாநில அரசுகளும் தனது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கும். இதிலே மாநில அரசுகள் தரும் இலவசங்கள்.. எப்படியும் மக்களின் வரிச்சுமை கூடும்.


sridhar
மார் 18, 2025 17:27

Pay commission வங்கி ஊழியர்களுக்கு இல்லை . மத்திய அரசு மற்றும் பல மாநில அரசு ஊழியர்களை விட வங்கி சம்பளம் குறைவு தான்.


கல்யாணராமன்
மார் 18, 2025 11:20

அனைத்து வங்கிகளும் தனியார்மையமாக ஆக்கிவிடலாம்.


Natarajan Ramanathan
மார் 18, 2025 11:05

ஆண்டில் பாதிநாட்கள்கூட பணிசெய்யாத ஆசிரியர்களே வேலை நிறுத்தம் செய்யும் நாடு இது.


GMM
மார் 18, 2025 10:39

ஒரு வங்கி கணக்கு துவங்குவது போல், ஒரு ஆண்டுக்கு மேல் செயல் படாமல் இருந்தால் கம்ப்யூட்டரில் இருந்து பிரிண்ட் எடுத்து, நீக்கி விட வேண்டும். வங்கி கணக்கு, மொபைல் எண், ஆதார், வருமானவரி எண் .. இணைக்க படுவதால், இது மின் பரிவர்த்தனை துவங்க இடையூறு செய்கிறது. நாமினி, மற்றும் நிலுவை தொகையை மாற்றும் கணக்கு எண் பெற வேண்டும். வங்கி ஊழியர்கள் பணி எளிது, வசதி உடையது. சம்பளம் போதும், போராட்டம் தேவையற்றது.


கல்யாணராமன்
மார் 18, 2025 11:17

என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள வங்கி அதிகாரிகளின் உதவியை நாட வேண்டும் இல்லையேல் ஆடிட்டரிடம் போய் கேட்க வேண்டும் அந்த அளவில் மிக தெளிவாக குழப்பி விட்டுள்ளீர்.


ஆரூர் ரங்
மார் 18, 2025 15:29

GMM இது கூகிள் மொழிப்பெயர்ப்பா? நன்றாகப் புரிகிறது.


M.COM.N.K.K.
மார் 18, 2025 10:38

வங்கிகளை தேசியமயமாக்கியதால் வந்த வினைதான் இது. தனியார் வங்கியாகவே இருந்திருந்தால் இந்த பிரச்னை ஒரு போதும் வந்திருக்காது.தொழில் செய்யும் அனைவரும் பாதிக்கப்படுவார்கள் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தியாவில் அரசு ஊழியர்கள் சங்கம் வைத்து போராட்டம் நடத்துவதை தடை செய்யவேண்டும். காவல் துறைக்கோ ராணுவத்துக்கோ சங்கமே கிடையாது அதுபோல் அரசு ஊழியர்களுக்கு சங்கம் கூடாது என்று சட்டம் கொண்டுவருவதுதான் ஒரே வழி இதை எந்த அரசு செய்தாலும் பாராட்டலாம் ஆனால் செய்யமாட்டார்கள் காரணாம் ஒட்டு வங்கி போய்விடுமே அதற்கு பயந்து இதை செய்யமாட்டார்கள்.


முக்கிய வீடியோ