வாசகர்கள் கருத்துகள் ( 1 )
குடி தான்...
மேலும் செய்திகள்
ராணுவ தேர்வுக்கு வந்த இளைஞர்கள் மீது தடியடி
11-Nov-2024
ஹைதராபாத்; தெலுங்கானா மாநிலத்தில் அதிவேகமாக வந்த கார் ஏரிக்குள் பாய்ந்ததில் 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி இறந்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு; ஹைதராபாத் அருகே எல். பி நகர் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞாகள் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். யாதாத்தி புவனகிரி மாவட்டம் அருகே ஜலல்புர் என்ற கிராமம் அருகே வந்தனர், அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில இருந்த யாதகிரிகுட்டா ஏரிக்குள் பாய்ந்தது. அசுர வேகத்தில் பாய்ந்த கார், நீருக்குள் மறைய உள்ளே இருந்தவர்களில் ஒருவர் மட்டும் காரின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியி வந்து உயிர் தப்பினார். மற்ற 5 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர். விபத்தை அறிந்த அங்குள்ள மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு மீட்பு பணிகளில் இறங்கினர். நீண்ட நேரம் தேடுதலுக்கு பின்னர் 5 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடி தான்...
11-Nov-2024