உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  மரத்தில் கார் மோதி 5 பேர் பலி

 மரத்தில் கார் மோதி 5 பேர் பலி

ஆக்ரா: மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தில் நான்கு பேர் மற்றும் டிரைவர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோவிலுக்கு சென்றனர். ஊர் திரும்பிய போது, ஆக்ரா மாவட்டம் சித்ரஹாட் அருகே சாலையோர மரத்தில் கார் மோதியது. காரில் இருந்த காம்தா பிரசாத்,70, அவரது மகன் தேவேந்திரா,35, மருமகள் சீமா,32, பேத்தி ஆராத்யா, 3, மற்றும் கார் டிரைவர் ரிஷி,20, அதே இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், உடல்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !