உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்டுப்பாட்டை இழந்த வேன் கிணற்றில் விழுந்து விபத்து: ம.பி.,யில் 10 பேர் உயிரிழந்த சோகம்

கட்டுப்பாட்டை இழந்த வேன் கிணற்றில் விழுந்து விபத்து: ம.பி.,யில் 10 பேர் உயிரிழந்த சோகம்

போபால்: ம.பி.,யில் சுற்றுலா சென்ற வேன்,கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர்.மத்திய பிரதேசம் மாநிலம் மாண்ட்சௌர் மாவட்டம், நாராயண்கர் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட கச்சாரிய கிராமத்தில் இன்று 14 பேருடன் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள திறந்த வெளி கிணற்றில் விழுந்தது. தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:பக்தர்களை ஏற்றிச்சென்ற சென்ற வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து புத்த- தகர்வாட் கடவை அருகே சாலையை விட்டு விலகி, ஒரு பைக் மீது மோதி, திறந்த வெளி கிணற்றில் விழுந்தது. இந்த விபத்தில் உள்ளூர் மீட்புப் பணியாளர் உள்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்து உள்ளனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். துரதிர்ஷ்டவசமாக, சிக்கியவர்களை மீட்க கிணற்றில் இறங்கிய உள்ளூர்வாசி மனோகர் சிங் என்பவர் விஷ வாயு தாக்கியதில் உயிரிழந்தார்.படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மந்த்சௌர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவ நடந்த இடத்திற்கு வந்த துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்தா, தனது வருத்தத்தைத் தெரிவித்து, மீட்புப் பணிகளுக்கான வழிகாட்டுதலை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஏப் 27, 2025 22:04

வேடிக்கை பார்க்கும் வேலை வாய்ப்பு அங்கே நிறைய பேருக்கு கிடைச்சிருக்கு.


thehindu
ஏப் 27, 2025 21:34

நாடெங்கும் தடுமாற்றம் . அரசு இந்தியாவை போதை நாடாக மாற்றிவிட்டது


m.arunachalam
ஏப் 27, 2025 21:02

கட்டுப்பாட்டை இழந்தது வேன் அல்ல . வண்டி ஓட்டிய அந்த மனதை பக்குவப்படுத்தாத அந்த ஓட்டுநர் தான் . உடன் பயணித்தவர்களாவது பக்குவமாக பேசி எச்சரித்திருந்து இருக்கலாம் .


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
ஏப் 27, 2025 20:02

கைபிடிச்சுவராவது கட்டியிருக்கலாம்


Padmasridharan
ஏப் 27, 2025 19:21

Sorry, காப்பாற்றப்போனவரும் இறந்துட்டாரு. திறந்தவெளிக் கிணறு என்று தெரிந்து அதை மூடாமல் பாதுகாப்பு தரவேண்டிய காவலர்கள், அரசியல்வாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.


முக்கிய வீடியோ