உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோதாவரியில் குளிக்கச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கோதாவரியில் குளிக்கச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஜமுந்திரி: ஆந்திராவில் கோதாவரி நதியில் நீராட சென்ற ஐந்து பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.மகா சிவராத்திரியை முன்னிட்டு, கோவிலுக்கு செல்வதற்கு முன்னர், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், தாடிப்புடி கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் கோதாவரி நதியில் நீராட சென்றனர். அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்த நிலையில் ஏழு பேர் பத்திரமாக கரை திரும்பினர். ஆனால், எஞ்சிய ஐந்து பேர் நதியின் ஆழமான பகுதிக்கு சென்றனர். இதனால், அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.ஆகாஷ், திருமலைசெட்டிபவன், பாடலா சாய், பாடலா ராமா துர்கா பிரசாத் மற்றும் அனிசெட்டி பவன் கணேஷ் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கரிலும் 5 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கரின் சர்குஜா மாவட்டத்தில், சிவன் கோவிலுக்கு சென்ற பக்தர்களின் கார் மீது லாரி மோதியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Subramanian
பிப் 26, 2025 22:17

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


பல்லவி
பிப் 26, 2025 20:36

பாவம் மக்கள், ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இல்லை


Ramesh Sargam
பிப் 26, 2025 20:15

நீச்சல் தெரியாமல் ஏன் ஆற்றில் குளிக்கச்செல்லவேண்டும்.


சமீபத்திய செய்தி