உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் 50 நக்சலைட்டுகள் சரண்டர்: ஆயுதங்களும் ஒப்படைப்பு

சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் 50 நக்சலைட்டுகள் சரண்டர்: ஆயுதங்களும் ஒப்படைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜாப்பூர்; சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் 50 நக்சலைட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்துள்ளனர்.சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளை ஒடுக்க, மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மாநில சிறப்புப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் செயலாற்றி வருகின்றனர்.இந்நிலையில், பீஜாப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 50 நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ளனர். ஆயுதங்களையும் அவர்கள் ஒப்படைத்துள்ளனர்.இதுபற்றி மூத்த காவல்துறை உயரதிகாரி கூறுகையில், இன்று மட்டும் 50 நக்சலைட்டுகள் முன்வந்து சரண்டராகி இருக்கின்றனர். அவர்களில் 14 பேரின் தலைக்கு ரூ.68 லட்சம் வரை வெகுமதி அறிவிக்கப்பட்டு இருந்தது.மாநில போலீஸ் மற்றும் மத்தி ரிசர்வ் படையின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர் என்றார்.பிரதமர் மோடியின் சத்தீஸ்கர் வருகைக்குக் சிலமணி நேரங்கள் முன்பாக நக்சலைட்டுகள் சரண்டர் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Varadarajan Nagarajan
மார் 31, 2025 08:10

நமது நாட்டின் ஜனநாயகத்தின்மீது நம்பிக்கைவைத்து தீவிரவாதத்தை கைவிட்டு ஆக்கபூர்வமான முன்னேற்றப்பாதையில் இணைந்துள்ளனர். வாழ்த்துக்கள். அப்பகுதியில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இவைகளுக்கு அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்தால் மேலும் பலர் தீவிரவாதத்தை கைவிடுவார்கள் என்பது நிச்சயம்


Barakat Ali
மார் 30, 2025 23:31

அமித் ஷாவால் தேசவிரோத திமுகவை சரணடைய வைக்க முடியாதோ ????


Appa V
மார் 30, 2025 19:55

சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் முடிந்தும் பஸ்தர் கான்கேர் நாராயன்பூர் ஜெகதல்பூர் அபஸ்மாட் பகுதிகளில் நக்சல் தனி ராஜ்ஜியம் நடத்திக்கொண்டு வந்தது இப்போது தான் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது .அரசாங்கமும் பனிஷ்மென்ட் போஸ்டிங் என்று போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளின் மனோதைரியத்தை சுக்கு நூறாக்கி வைத்திருந்தது ..


புதிய வீடியோ