உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5.2 கிலோ எடையில் பிறந்த பிள்ளையார் குழந்தை: மருத்துவர்கள் ஆச்சரியம்

5.2 கிலோ எடையில் பிறந்த பிள்ளையார் குழந்தை: மருத்துவர்கள் ஆச்சரியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் 5.2 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; ஜபல்பூரைச் சேர்ந்தவர் சுபாங்கி யாதவ். கர்ப்பிணியான இவர், பிரசவத்துக்காக அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 5.2 கிலோ ஆக இருந்ததை கண்டு மருத்துவமனை நிர்வாகமே ஆச்சரியம் அடைந்தது.இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது; வழக்கமாக ஆண் குழந்தை எனில், அதிகபட்சம் 3.2 எடை என்ற அளவில் தான் பிறக்கும். இந்த மருத்துவமனையிலும் அப்படித்தான் இதுவரை நிகழ்ந்துள்ளது. ஆனால் முதல் முறையாக, 5.2 கிலோ எடையில் ஆரோக்கியமாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது ஆச்சரியமே.கர்ப்பகாலத்தில் அந்த பெண், எடுத்துக் கொண்ட உணவுமுறைகளே குழந்தையின் எடை 5.2 ஆக அதிகரிக்க காரணமாக இருக்கலாம். சிசேரியன் ஆபரேஷன் எங்களுக்கு சவாலாக இருந்தது. குழந்தையும், தாயும் நலமாக உள்ளனர். இவ்வாறு மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.எங்கள் வீட்டுக்கு விநாயகரே பிறந்துள்ளார் என்று குழந்தையின் தாய் சுபாங்கி யாதவும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிக எடையில் குழந்தை பிறந்துள்ளதால் இருவரையும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
செப் 05, 2025 22:11

மற்ற குழந்தைகள் பிறந்த பின் வளரும். ஆனால் நீ வளர்ந்தே பிறந்து விட்டாய் அபாரம்.


Anantharaman Srinivasan
செப் 05, 2025 21:29

கர்ப்ப காலத்தில் ஓவர் வைட்டமின் மாத்திரைகள் உட்கொண்டாலும் இதுபோல் குழந்தை பிறக்கும்.


வாய்மையே வெல்லும்
செப் 05, 2025 18:55

விநாயகா இந்த குழந்தைக்கு நல்ல படிப்பையும் அறிவையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பாயாக . நீ சமத்து தெய்வம். எங்களை சோதிக்காமல் இருப்பாய் என்பது அனேகரது நம்பிக்கை இறைவா.. என்றும் அன்புடன்.. வாய்மையே வெல்லும்


என்றும் இந்தியன்
செப் 05, 2025 16:49

ஆசீர்வாதங்கள் குழந்தாய்