உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய படையில் 545 டிரைவர் காலியிடங்கள்: பத்தாம் வகுப்பு படித்து இருந்தாலே போதும்!

மத்திய படையில் 545 டிரைவர் காலியிடங்கள்: பத்தாம் வகுப்பு படித்து இருந்தாலே போதும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில், 545 'கான்ஸ்டபிள்' காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 6.இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கான்ஸ்டபிள் (டிரைவர்) பிரிவில் 545 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி என்ன?

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் அவசியம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்வது எப்படி?

உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

https://recruitment.itbpolice.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
அக் 17, 2024 16:45

இந்தி மாலும் ஹை?நஹி? உன்க்கு வேலை நஹி. ஜாவ்.. ஜாவ்.


P. VENKATESH RAJA
அக் 17, 2024 15:52

பயனுள்ள செய்தி, நன்றிங்க


புதிய வீடியோ