உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொடர் போராட்டம் எதிரொலி; டில்லியில் 57 மெட்ரோ நிலையங்கள் மூடல்

தொடர் போராட்டம் எதிரொலி; டில்லியில் 57 மெட்ரோ நிலையங்கள் மூடல்

புதுடில்லி: தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக இண்டி கூட்டணி மற்றும் மாணவர் அமைப்பினர், டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கைது செய்து, போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர், மாணவர் அமைப்பினர் போராட்டத்தை தீவிரப்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில், கரப்பான் பூச்சி அமைப்பினரும் நாளை (அக்.,10) போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். எனவே, மாணவர்கள் டில்லியில் குவிவதை தடுக்கும் பணியில் டில்லி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பிற மாநிலங்களில் இருந்து டில்லிக்கு வரும் மாணவர்கள், பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி, இறக்கி விடப்படுகின்றனர். மாணவர்கள் டில்லி ஜந்தர் மந்தருக்கு வருவதை தடுக்கும் விதமாக, இன்று இரவு 9 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை, 57 மெட்ரோ நிலையங்கள் மூடப்படுவதாக டில்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து டில்லிக்கு செல்லும் 11 ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரு ரயில்களின் சேவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Bhakt
அக் 09, 2026 21:35

Orchestrated by foreign nations. Implemented by Indian National Congress with the Italian leader of opposition countries against Bharat.


Bhakt
அக் 09, 2026 21:33

Delhi Police should get ready with loads Cockroach Hit....These Cockroaches should not be seen any more in Delhi.


அப்பாவி
அக் 09, 2026 19:06

அண்டை மாநிலங்களின் சதியா இருக்கும். யாரு உ . பி, ம. பி, ஹரியானா, பிஹார் ஆளுங்கதான்.


GMM
அக் 09, 2026 18:04

ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர் பணியை சரிவர செய்யவில்லை. திடீர் என்று தாய்லாந்து சென்று விடுகிறார். அங்கு ரகசிய கேமிராமூலம் படம் வெளியிட்டால் நாட்டிற்கு தலை குனிவு. அவரை பதவி விலக சொல்லி போராட்டம் நடத்த முடியும். போராடி அதிகாரம் இனி பெற முடியாது. நீதிமன்றம் சட்டம் மீறி தன் கட்டுபாட்டில் நாட்டை வைக்க முடியாது.


GMM
அக் 09, 2026 17:52

நீதிமன்ற வழக்குகள் நிர்வாகத்தில் அதிகம் குறுக்கீடு செய்து வருகின்றன. அந்நிய நிதி பெற்று, தொடர் போராட்டம் என்றால் மக்கள் வேலை செய்து பிழைக்க வேண்டாமா? ஒரு அரசியல் சாசன அதிகாரியை விலக கூறும் போராட்டம் பற்றி நீதிபதி முடிவில் கடுமை இல்லை. பிரச்சனை உருவாக்கி அன்றாடம் போராட முடியும். இவர்களிடம் மக்கள் நல கொள்கை இருந்தால், தேர்தலில் வெற்றி பெற முடியும். மக்கள் போராட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட முன்வர வேண்டும். அப்போது தான் தீர்வு கிடைக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை