உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5.80 கோடி போலி ரேஷன் கார்டுகள்; டிஜிட்டல் மயமாக்கலால் கண்டுபிடிப்பு

5.80 கோடி போலி ரேஷன் கார்டுகள்; டிஜிட்டல் மயமாக்கலால் கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி, ரேஷன் எனப்படும் பொது வினியோக முறையில், 'டிஜிட்டல்' மயமாக்கும் நடவடிக்கைகளால், 5.80 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:ரேஷன் நடைமுறையை டிஜிட்டல் மயமாக்குவது, வெளிப்படைத்தன்மை ஏற்படுத்துவது, வினியோக நடைமுறையை திறம்பட கையாள்வது போன்றவற்றில் மத்திய அரசு தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் வாயிலாக, ரேஷன் பலன்கள் உரியவர்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.நாடு முழுதும் தற்போது, 20.4 கோடி குடும்பத்தாரிடம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதன் வாயிலாக, 80.6 கோடி பேர் பயன் பெறுகின்றனர்.இதில், 99.8 சதவீத ரேஷன் கார்டுகள் இ - கே.ஒய்.சி., எனப்படும் மின்னணு தகவல் முறையில் சரிபார்க்கப்பட்டுள்ளது. மேலும், 98.7 சதவீத பயனாளர்கள், ஆதார் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டுள்ளனர்.இதன் வாயிலாக, 5.80 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுதும், 5.33 லட்சம் பி.ஓ.எஸ்., எனப்படும் பாயின்ட் ஆப் சேல்ஸ் என்றழைக்கப்படும் கருவியின் வாயிலாக, ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன.இதன் வாயிலாக, தகுதி வாய்ந்த நபர்களுக்கே ரேஷன் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Minimole P C
டிச 11, 2024 07:41

After thoughly further verifing, the ration card holers may be given the option that they want ration materials or money equivalent to that. The people opted for money may be asked to produce an affidavit that in case of finding false claims, they have to be imposed hefty fines. Such payments have to be paid only through bank accounts, thereby Govt can withdraw the amount any time.This will reduce corruption, time, energy etc.


Kanns
நவ 21, 2024 07:03

Shameful False Propagandas for Supporting Idiotic Modis Mental Aadhar People SpyMaster-Harasser. Many Native Citizens DENIED BASIC CITIZEN SERVICES BY GOVT Due to Lack of Aadhar While ALL FOREIGN INFILTRATORS GIVEN AADHAR & GOVT FREEBIES CONCESSIONS BENEFITS etc etc. Even Without Aadhar Every Real Criminals, Fakes could be FoundPunished


வாய்மையே வெல்லும்
நவ 21, 2024 08:05

உங்களுக்கு ரேஷன் சப்ளை மோடி யா கொடுக்கிறார்? திராவிடய ஆட்சியாளர்கள் தான் என்கிற அடிப்படை புரிதல் இல்லாத ஒரு பேச்சு . எவனும் உங்க கூற்றை நம்பமாட்டான் உங்களுக்கு பிரச்சனை என்றால் பொதுவெளியில் வலைத்தளத்தில் கூறவேண்டியது தானே. ? சும்மாவாச்சும் வாய்க்குவந்தபடி சொன்னால் வேலைக்காகாது . நீங்கள் கூறிய வெளிநாட்டவருக்கு கிடைப்பது வோட்டு பிச்சை கேட்கும் மேற்குவங்க தீதி உள்ளடி வேலை செய்வது . அது ஊரறிந்த விஷயம் . மத்திய சர்க்கார் செய்தமாதிரி சொல்லவேணாம் .


nagendhiran
நவ 21, 2024 06:10

இன்னும் மாநிலவாரியாக ஆதாரை வைத்து சரிபார்த்தால் இன்னும் போலிகளை ஒழிக்கலாம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை