உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6 கைத்துப்பாக்கிகள் எல்லையில் மீட்பு

6 கைத்துப்பாக்கிகள் எல்லையில் மீட்பு

சண்டிகர்:எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பஞ்சாப் போலீஸ் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், ஆறு கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.அமிர்தசரஸ் எல்லைப் பகுதியில் நேற்று முன் தினம், தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மஹாவா கிராமத்தின் வயலில், மஞ்சள் நிற நாடா சுற்றப்பட்ட ஒரு பெரிய பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் ஒரு உலோக கம்பி வளையம் இணைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு சோதனைக்குப் பின், அந்த பொட்டலத்தை போலீசார் பிரித்தனர். அதில், ஆறு கைத்துப்பாக்கிகள் மற்றும் 14 தோட்டாக்கள் இருந்தன. அவற்றை மீட்ட போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ