உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6 லட்சம் லாரிகள் ஓடவில்லை: கர்நாடகா ஸ்தம்பிக்கிறது

6 லட்சம் லாரிகள் ஓடவில்லை: கர்நாடகா ஸ்தம்பிக்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: டீசல் விலை உயர்வு. சுங்கசாவடி கட்டண அதிகரிப்பு மற்றும் அடிப்படை கூலி விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து கர்நாடகாவில் இன்று லாரி ஸ்டிரைக் நடக்கிறது. சுமார் 6 லட்சம் லாரிகள் ஓடாததால் மாநிலம் முழுவதும் பல்வேறு அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கர்நாடக லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் இந்த ஸ்டிரைக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாநிலம் முழுவதும் முழு ஆதரவு கிட்டியுள்ளது. இந்த ஸ்டிரைக்கால் லாரி மூலம் செல்லும் தண்ணீர் விநியோகம். சமையல் காஸ் சிலிண்டர் சப்ளை, அடியோடு நிறுத்தப்பட்டதால் பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஜீன்ஸ் உள்பட ஆயத்த ஆடைகள் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஸ்டிரைக் தொடரும் பட்சத்தில் மேலும் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் அரசு தரப்பில் இன்று பேச்சு நடக்கிறது. இதில் முடிவுகள் எட்டாத பட்சத்தில் மாநிலத்தில் நிலைமை சீராகாது. பல்வேறு பொருட்களில் விலையும் எகிறக்கூடும். தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு அளித்திருப்பதால் லாரி ஸ்டிரைக்கால் தமிழக கர்நாடக இடையே செல்லும் போக்குவரத்து தடைபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஏப் 15, 2025 21:08

அப்பவும் பெங்களூருவில் டிராபிக் ஜாம் குறைந்த மாதிரி தெரியவில்லை.


TRE
ஏப் 15, 2025 17:33

சமீபத்தில் மோடிஅரசு பெட்ரோல் மற்றும் காஸ் விலையை உயர்த்தியதை கண்டித்து கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் போராட்டம் காரணமாக 6 லட்சம் லாரிகள் ஓடவில்லை: கர்நாடகா ஸ்தம்பிக்கிறது


புதிய வீடியோ