உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானாவில் மாவோயிஸ்ட்கள் 6 பேர் சரண்

தெலுங்கானாவில் மாவோயிஸ்ட்கள் 6 பேர் சரண்

ஐதராபாத்: தெலுங்கானாவில் மாவோயிஸ்ட்கள் 6 பேர் போலீசார் முன்னிலையில் சரணடைந்தனர்.மத்திய அரசு, அடுத்தாண்டுக்குள் நாட்டில் மாவோயிஸ்ட் அமைப்பை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி முக்கிய நக்சல் தலைவர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். பலர் சரண் அடைந்து வருகின்றனர்.ஒரு காலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தில் இருந்த தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநில கிராமங்கள், இப்போது அவற்றில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றன.இந்நிலையில் தெலுங்கானாவில் பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்டத்தில் போலீஸ், சிஆர்பிஎப் நடத்திய 'ஆபரேஷன் செயுதா' முயற்சியின் கீழ், சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒருவர் உட்பட 6 மாவோயிஸ்ட்டுகள் சரண் அடைந்தனர். இவர்கள் போலீஸ் அதிகாரி பி ரோஹித் ராஜு முன் சரணடைந்தனர்.சரண் அடையும் மாவோயிஸ்ட்களுக்கு மத்திய, மாநில அரசால் வழங்கும் உதவிகளை அறிந்த இவர்கள், மாவோயிஸ்ட் அமைப்பை விட்டு வெளியேறி தங்கள் குடும்பங்களுடன் சரண் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை