உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லாரி - பஸ் மோதல்: 6 பயணியர் பலி

லாரி - பஸ் மோதல்: 6 பயணியர் பலி

வதோதரா:குஜராத்தில், நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது அதிவேகமாக வந்த தனியார் பஸ் மோதியதில், பஸ்சில் பயணித்த ஆறு பயணியர் உயிரிழந்தனர். ராஜஸ்தானில் இருந்து குஜராத்தின் சூரத் நோக்கி தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. 25க்கும் மேற்பட்டோர் பயணித்த அந்த பஸ் வதோதரா - ஹலோல் நெடுஞ்சாலையில் உள்ள கொடாம்பி கிராமம் அருகே அதிகாலை 4:00 மணிக்கு சென்றது. அப்போது, சாலையில் நின்றிருந்த லாரியின் பின்னால் அந்த பஸ் அதிவேகமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கியது. இந்த விபத்தில், பஸ்சில் இருந்த ஆறு பயணியர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர். போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை