உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் கண்ணிவெடி விபத்தில் 6 வீரர்கள் காயம்

காஷ்மீரில் கண்ணிவெடி விபத்தில் 6 வீரர்கள் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீரின் ரஜோரியில் கண்ணிவெடி வெடிப்பில் 6 வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நவ்ஷேராவின் முன் பகுதியில் நடந்தது.இன்று காலையில் ஓரு வீரர் தற்செயலாக, கண்ணிவெடியின் மீது கால் வைத்ததால் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. காயமடைந்த அனைத்து வீரர்களும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், தற்போது அவர்களின் நிலைமை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்ஓசி) அருகிலுள்ள முன்னோக்கிப் பகுதிகள் ஊடுருவல் எதிர்ப்புத் தடை அமைப்பின் ஒரு பகுதியாகும். எனவே அந்த இடங்களில் கண்ணிவெடிகள் வைக்கப்படுகின்றன. ஊடுருவல்களைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட இந்த கண்ணிவெடிகள், சில நேரங்களில் கனமழையால் இடம் பெயரக்கூடும், இது தற்செயலான வெடிப்பு அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

raja
ஜன 15, 2025 04:05

இதற்கு உச்ச நீதி மன்றம் தான் பொறுப்பு....ஜனாதிபதி ஆட்சியில் அமைதியாய் இருததை இந்த தேதி குள் தேர்தல் நடத்தி புதிய அரசு அமைக்க வேண்டும் என்று கெடு விதைததே இதற்கெல்லாம் காரணம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை