உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெருநாய்கள் கடித்து 6 மாணவிகள் காயம்

தெருநாய்கள் கடித்து 6 மாணவிகள் காயம்

மூணாறு:கேரள மாநிலம் மூணாறு அருகே தேவிகுளத்தில் பள்ளி வளாகத்திற்குள் சுற்றிய தெருநாய்கள் கடித்ததில் மாணவிகள் ஆறு பேர் பலத்த காயமடைந்தனர். மூணாறு அருகே தேவிகுளத்தில் அதிக எண்ணிக்கையில் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. தேவிகுளம் அரசு தமிழ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று காலை 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நின்று கொண்டிருந்தனர். அங்கு சுற்றிய தெருநாய்கள் கடித்ததில் 8 ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவிகள் மொத்தம் ஆறு பேர் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்றனர். மற்ற மாணவிகள் வகுப்பறைகளுக்குள் சென்று தப்பினர். மூணாறில் ஒரு மாதத்திற்கு முன் சுற்றுலா பயணிகள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோரை தெருநாய் கடித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ