வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நாம் சுயமாக விமான இஞ்சின்களை தயாரிக்க வேன்டும்
புதுடில்லி: வரும் 2026 மார்ச்சிற்குள் இந்திய விமானப் படைக்கு 6 தேஜாஸ் ஜெட் விமானங்கள் கிடைக்கும் என்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டி.கே.சுனில் கூறினார்.இந்திய விமானப் படைக்கு தேவையான அதிநவீன போர் விமானங்களை ஹச்.ஏ.எல்., தயாரித்து கொடுத்து வருகிறது. தேஜாஸ் விமானங்கள் உரிய நேரத்தில் அளிக்கப்படவில்லை என்ற புகார் எழுந்த நிலையில், அது குறித்து ஹச்.ஏ.எல்., தலைவர் சுனில், டில்லியில் பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது:அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இந்திய விமானப்படைக்கு குறைந்தது 6 தேஜாஸ் இலகுரக போர் விமானங்கள் கிடைக்கும். விமானப் படைத் தலைவர் ஏர் சீப் மார்ஷல் ஏ.பி. சிங் இந்த விஷயத்தை எழுப்பியதால், எல்.சி.ஏ. எம்.கே-1ஏ வகை ஜெட் விமானத்திற்கான டெலிவரி அட்டவணையில் ஏற்பட்ட குழப்பம் ஒரு பெரிய பிரச்சினையாக மாறியது.ஜி.இ., ஏரோ ஸ்பேஸ் அதன் இயந்திரங்களை வழங்குவதற்கான காலக்கெடுவை தவறவிட்டதே டெலிவரி தாமதங்களுக்குக் காரணம்.அமெரிக்க நிறுவனம் எப் 404 இன்ஜின்களை சரியான நேரத்தில் வழங்கி இருந்தால் தாமதம் ஏற்பட்டிருக்காது.நடப்பு நிதியாண்டில் ஜி.இ., ஏரோ ஸ்பேஸ் 12 இன்ஜின்களை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். தேஜாஸ் எம்.கே-1ஏ என்பது உயர்தர ரேடார், மின்னணு போர் உபகரணங்கள் மற்றும் ஏவுகணைகளின் வரிசையைக் கொண்ட ஒரு உலகத் தரம் வாய்ந்த விமானம். இது நமது விமானப்படைக்கு பேருதவியாக இருக்கும்.இவ்வாறு சுனில் கூறினார்.
நாம் சுயமாக விமான இஞ்சின்களை தயாரிக்க வேன்டும்