உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.6,498 கோடி மத்திய அரசு நிதி

ரூ.6,498 கோடி மத்திய அரசு நிதி

பெங்களூரு: மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரி பங்கை சரியாக வழங்குவதில்லை என்று பல்வேறு மாநில அரசுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.இதற்கிடையில், மாநிலங்களுக்கான அக்டோபர் மாத வரி பங்கை, மத்திய அரசு நேற்று விடுவித்துள்ளது. கூடுதலாக ஒரு மாதத்துக்குரிய நிதியையும் முன்னதாகவே வழங்கி உள்ளது. கர்நாடகாவுக்கு 6,498 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், வளர்ச்சி பணிகள், நல திட்டங்களுக்கு பயன்படும் வகையிலும் முன் பணம் வழங்கி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை