உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யானை தாக்கி 4 நாட்களில் 7 பேர் உயிரிழப்பு

யானை தாக்கி 4 நாட்களில் 7 பேர் உயிரிழப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நான்கு நாட்களில், யானை தாக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடைச்செய்துள்ளது.ஜார்க்கண்டின் சிங்டெகா மற்றும் கும்லா மாவட்டங்களில் காட்டு யானைக் கூட்டம் கிராமங்களில் புகுந்த 4 நாட்களில் 7 பேரைக் கொன்றுள்ளது, இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.கும்லா மாவட்டத்தில் இன்று நடந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கிராமத்தின் கூறுகையில்,இரண்டு அல்லது மூன்று யானைகள் தங்கள் கூட்டத்திலிருந்து விலகி, கடந்த சில நாட்களாக கும்லா மற்றும் சிம்டேகா மாவட்டங்களில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து, வீடுகளை அழித்து, பீதியை பரப்பி வருகின்றன.தீப்பந்தங்கள் மற்றும் டிரம்களைப் பயன்படுத்தி அவற்றை பயமுறுத்த முயற்சித்த போதிலும்,தடையின்றி அந்த யானைகள் உலா வருகின்றன. வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று காத்திருக்கிறோம் என்றனர்.இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இன்று காலையில் ரெய்டி காவல் நிலைய எல்லைப்பகுதிக்குட்பட்ட டெரங்டிஹ் அம்பகோனா வனத்துறை எல்லலைபகுதியான மாவ்வாவில் ஜேம்ஸ் குஜூர் 45, என்பவர் உடலை போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.மற்றொரு சம்பவத்தில், 73 வயது மதிக்கத்தக்க ஒருவர், ஆல்பர்ட் எக்கா பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே யானையால் தாக்கப்பட்டு,பலத்த காயங்களுடன் கிடந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்தார்.அங்கிருந்து அருகிலுள்ள கிராமமான ஜர்மானாவில் சென்ற அந்த யானை கூட்டம், அரவிந்த் சிங் ரஜாவத் 50, என்பவரை தாக்கியது. இதில் அவர் காயமடைந்தார்.இந்த காட்டு யானை கூட்டம் கடந்த வியாழன் கிழமை முதல் தாக்குதல் தொடங்கி அச்சுறுத்தி வருகிறது. சிம்டேகா மாவட்டத்தில் மட்டும் 3 பேர் யானை தாக்கி உயிரிழந்தனர்.நான்கு நாட்களுக்கு முன்பு,புரூய்ர்கி டிபோடோலியில் ,விகாஸ் ஓதார், என்பர் இரவு வீட்டிற்கு வெளியே துாங்கி உள்ளார். அப்போது அங்கு வந்த யானை கூட்டம் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.கடந்த 3 நாட்களுக்கு முன், பனோ காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜமங் கிராமத்தில் வசிக்கும் சிபியா லுகன், 45, என்பவர் யானையால் தாக்கி கொல்லப்பட்டார்.அதே நாளில் கும்லா மாவட்டத்தில் உள்ள பால்கோட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பர்தி-தேவ்கானில் கிறிஸ்டோபர் எக்கா என்பவர் யானை மிதித்து கொல்லப்பட்டார்.அதே நாளில், டெடார்டோலி கிராமத்தில் ஒரு செடியிலிருந்து அரக்கு எடுக்கும்போது ஹேம்வதி தேவி யானை மிதித்து கொல்லப்பட்டார்.யானை கூட்டத்தை விரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ