காஷ்மீரில் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள சம்பாவில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 7 பேரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதல் காரணமாக, பாகிஸ்தான் பதற்றத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் விடிய விடிய நடத்திய தொடர் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்து தக்க பதிலடி கொடுத்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=epgt365i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாகிஸ்தானின் 50 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள சம்பாவில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 7 பேரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகள் யாரும் பதுங்கி இருக்கிறார்களா என்று தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.