உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பல் கைது

குஜராத்தில் 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பல் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத் கடற்பகுதியில் கப்பலில் இருந்து 700 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.பதிவு செய்யப்படாத கப்பல் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக இந்திய கடற்படைக்கு உளவுத்தகவல் கிடைத்தது. விசாரணையில் அது உறுதியானது. இதனையடுத்து இந்திய கடற்படை கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டன.இன்று, இந்திய கடல் எல்லைக்குள் வெளிநாட்டு கப்பல் வந்த போது, இந்திய கடற்படை, போதைப்பொருள் கடத்தல் பிரிவினர், குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சோதனை செய்தனர். அதில் 700 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் இருந்தது. அதில் இருந்த வெளிநாட்டினர் 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரானைச் சேர்ந்தவர்கள் என அவர்கள் கூறினாலும், அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. கைதானவர்கள் சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.இதற்காக அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்து உள்ளார்.இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்காக 'சாகர் மாரத்தான்' என்ற திட்டத்தை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்தாணடு துவக்கினர். இதில், இந்திய கடற்படை, கடலோர காவல்படை, குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து செயல்படுகின்றனர். அந்த வகையில், தற்போது வரை நடத்தப்பட்ட சோதனையில் 3, 400 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இது தொடர்பாக ஈரானைச் சேர்ந்த 11 பேர் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 14 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

AMLA ASOKAN
நவ 15, 2024 23:51

ஒரே நாளில் டில்லியில் 900 கோடி , குஜராத்தில் 700 கிலோ போதைப்பொருள் வருடத்திற்கு 365 நாட்கள் . இந்தியா முழுவதும் என்று கணக்கிட்டால் 100 லட்சம் கோடி ரூபாய் விற்பனையை தாண்டும் . இதில் அரசியல் விமர்சனங்கள் - மத்திய மாநில ஆட்சிகள் மாறி மாறி குற்றச்சாட்டு . வெளிநாட்டிலிருந்து எவ்வித வரி கட்டாமல் வான், கடல் மூலம் தரமான பொருளாக உலா வரும் பச்சிலை தாவரம் . மக்கள் போதையில் தான் இந்தியாவின் வளர்ச்சியை காண்கிறார்கள் .


N Sasikumar Yadhav
நவ 15, 2024 22:03

கடத்தியவர்கள் திராவிட மாடலின் டொப்பிள் கொடி உறவுகள் . இதெல்லாம் ஹராம் இல்லை அவர்களுக்கு


ramesh
நவ 15, 2024 21:14

எதற்கு எடுத்தாலும் திருட்டு திராவிடன் என்று கருத்து போடும் கூட்டத்தை இங்கே காணோமே .


Anantharaman Srinivasan
நவ 15, 2024 20:50

எல்லா விஷயத்திலும் குஜராத் தான் நம்பர் 1 ஆகயிருக்கணும். இது குஜராத்தி களின் ஆசை. மாட்டியது கையளவு. மாட்டாதது கடலளவு.


ஆனந்த்
நவ 15, 2024 20:05

குஜராத்தில் தான் அதிக போதைப்பொருட்கள் சிக்குவது போல் தெரிகிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்


வைகுண்டேஸ்வரன்
நவ 15, 2024 20:10

குஜராத் துறைமுகம், ஜி யின் தொழில்துறை நண்பர் அதானி யின் கீழ் இயங்குகிறது தான் காரணம்.


Kumar
நவ 15, 2024 20:13

அவங்க ஒழுங்கா தான் டியூட்டி பாக்குறாங்க...


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 15, 2024 21:13

புலிகேசியின் நண்பரின் சரக்கும் வெளி மாநிலத்தில்தான் பிடிபட்டது ..... இதற்கு என்ன காரணமாக இருக்கும் ????


ஷாலினி
நவ 15, 2024 20:01

இன்னும் நல்லா தேடுங்கள். அதிகமான போதைப்பொருள் சிக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை