உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீபாவளி பண்டிகைக்காக நாடு முழுதும் 7 ஆயிரம் சிறப்பு ரயில்கள்: மத்திய அரசு ஏற்பாடு

தீபாவளி பண்டிகைக்காக நாடு முழுதும் 7 ஆயிரம் சிறப்பு ரயில்கள்: மத்திய அரசு ஏற்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தீபாவளி பண்டிகை மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு, நாடு முழுவதும் 7 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: பண்டிகை காலத்தில் தினமும் 2 லட்சம் பயணிகளை உதவுவதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி மற்றும் சாத் பூஜை காரணமாக மேற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மும்பை, சூரத், உத்னா, ஆமதாபாத், வதோதரா நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும்.கடந்த ஆண்டு 4,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இச்சேவையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தாண்டு 7 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தீபாவளி பண்டிகை அக்.,31ல் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் சாத் பண்டிகை நவ.,5 ல் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
அக் 24, 2024 19:59

சிறப்பு ரயில்கள் வரவேற்கிறோம். அதேசமயம் ரயில்வே அமைச்சகம், ரயில்வே அதிகாரிகள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஏன் என்றால் சமீப காலங்களில் ரயில் விபத்துக்கள் அதிகம். தெரியும், அவையெல்லாம் சதிகாரர்கள் செயல் என்று. அந்த சதிகாரர்களை கண்டறிந்து, அவர்களை பிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும். மக்கள் நிம்மதியாக பயணிக்க ஏற்பாடு செய்யவேண்டியது உங்கள் பொறுப்பு.


ஆனந்த்
அக் 24, 2024 18:33

தென் மாநிலங்களுக்கும் இன்னும் ரயில்கள் விட வேண்டும்.


ஷாலினி
அக் 24, 2024 18:31

தமிழகத்திலும் இன்னும் நிறைய ரயில்கள் விட்டால், பயனுள்ளதாக இருக்கும்.


சமீபத்திய செய்தி