உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் 7,072 ஊழல் வழக்குகள்!

நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் 7,072 ஊழல் வழக்குகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சிபிஐ விசாரித்து வரும் 7,072 ஊழல் வழக்குகளின் விசாரணை பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 2024ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, மொத்த வழக்குகளில் 1,506 வழக்குகள் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவும், 791 வழக்குகள் மூன்று ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் நிலுவையில் உள்ளன. 2,115 வழக்குகள் ஐந்து ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் நிலுவையில் இருக்கின்றன. 2,281 ஊழல் வழக்குகள் 10 முதல் 20 ஆண்டுகள் வரையும், 379 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவும் நிலுவையில் உள்ளன. இந்த அறிக்கையின்படி, சிபிஐ மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மொத்தம் 13,100 மேல்முறையீடுகள் வெவ்வேறு உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 2024 ஆம் ஆண்டில், 644 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இவற்றில், 392 வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெற்றனர். 154 வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டனர். 21 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. கடந்த 2004ம் ஆண்டு குற்றத்தீர்ப்பு விகிதம் 69.14 சதவீதமாக இருந்தது. இது 2023ல் 71.47 சதவீதமாக இருந்தது.2024ம் ஆண்டில், சிபிஐ 1,005 வழக்குகளில் விசாரணைகளை நிறைவு செய்தது. இதில் 856 வழக்குகள் மற்றும் 149 முதற்கட்ட விசாரணை வழக்குகள் அடங்கும். 2024 முடிவில், மொத்தம் 832 வழக்குகள் நிலுவையில் இருந்தன. 2024ம் ஆண்டில், சிபிஐ ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 502 வழக்குகளைப் பதிவு செய்தது. 859 அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M Ramachandran
ஆக 31, 2025 23:48

பசை உள்ள கேசுகளினால் ஆரபோடுவதால் லாபமே.


K.n. Dhasarathan
ஆக 31, 2025 21:39

இதில் ஒன்றிய அரசு அனுமதி கொடுக்காமல் நிலுவையில் உள்ளவை எத்தனை ?


என்றும் இந்தியன்
ஆக 31, 2025 18:45

அப்போ மொத்தமாக நிலுவையில் இருக்கின்றதே 5.3 கோடி வழக்குகள் இன்று வரை அதை என்ன செய்ய


GMM
ஆக 31, 2025 18:45

நீதிமன்றம் தனக்கு தானே ஒரு தவறான சுய நிர்வாகத்தை அமைத்து கொண்டது. நீதிபதி, வழக்கறிஞர் அரசின் கட்டுபாட்டில் இல்லை. நீதி மன்றம் கடிவாளம் இல்லாத குதிரை போல் உள்ளது. மக்கள் தாவா மீது இஷ்டம் போல் விசாரணை, தீர்வு. பல குடும்பங்கள் வழக்கில் முடங்கின. நல்ல அரசை கூட எப்போதும் முடக்க முடியும். தற்போது மத்திய அரசு கடிவாளம் இல்லாத குதிரை வண்டியில் துணிந்து பயணிக்கிறது. நிலுவை வழக்குகள் குறையாது.


V Venkatachalam
ஆக 31, 2025 18:21

தக்க சமயத்தில் வெளியிட்ட தினமலருக்கு சூப்பர் தேங்ஸ். இப்போ நாட்டுப்பற்றுன்னா என்னான்னு கேக்கும் சூப்பர் நீதி மன்றம் இதற்கு காலக்கெடு நிர்ணயித்து உச்ச நீதிமன்றத்தின் மாண்பை நிலை நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன். கவர்னர் அவரு இஷ்டத்துக்கு மசோதாவை வச்சுக்க கூடாதுன்னு நாங்களும் இஷ்டத்துக்கு வச்சுக்க கூடாதுன்னு அறிவிப்பாங்களா? உடனே சுற்றறிக்கை விடுவாங்களா? அதுக்கும் காலக்கெடு வச்சிடுவாங்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை