உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தினருக்கு போலி ஆதார் அட்டைகள்: அச்சிட்டு கொடுத்த 8 பேர் கைது

ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தினருக்கு போலி ஆதார் அட்டைகள்: அச்சிட்டு கொடுத்த 8 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேற ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தினருக்கு போலி ஆதார் அட்டைகளை தயாரித்த இரண்டு கும்பலை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தினர் மற்றும் நேபாள மக்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு போலி ஆதார் அட்டைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர் என கூடுதல் காவல் துறை இயக்குநர் அமிதாப் யாஷ் தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0t9nmsl0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரு மிக பெரிய மோசடியை உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) முறியடித்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட கும்பல் மின்னணு முறைகளைப் பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரிக்கும் பணியை 9 மாநிலங்களில் தீவிரமாக செய்து வந்தது விசாரணையில் அம்பலம் ஆனது.

ரூ.2 ஆயிரம் டூ ரூ.40 ஆயிரம்

இது குறித்து கூடுதல் காவல் துறை இயக்குநர் அமிதாப் யாஷ் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சோதனை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட இரண்டு கும்பலை சேர்ந்த 8 பேர் பல்வேறு மோசடிகளை செய்துள்ளனர். ஒவ்வொரு போலி ஆதார் அட்டைக்கும், கும்பல் ரூ.2,000 முதல் ரூ.40,000 வரை வசூலித்தது. இந்த ஆதார் அட்டைகள் பின்னர் பாஸ்போர்ட் மற்றும் பிற போலி இந்திய ஆவணங்களைப் பெறவும், அரசாங்கத் திட்டங்களைப் பெறவும் மக்களால் பயன்படுத்தப்பட்டன. இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் ஆகியவற்றின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அமிதாப் யாஷ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Rathna
ஆக 23, 2025 16:17

இந்த கும்பலை உள்ளே விடுவதால் மேற்கு வங்காளம் அரண்டு போயி உள்ளது. இங்கே உள்ளே விட்டால் திராவிட கட்சிகள் கோவை, ஈரோடு, திருப்பூர் தொகுதிகளில் நிரந்தரமாக தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போகும். ஒருவன் வந்ததிற்கே திருவள்ளூர் சிறுமி மானபங்க வழக்கில் தமிழ்நாடு ஆடி போனது. 80 வருட வரலாற்றில் ரயில்வே துறையில் ரயில்வே லெவல் கிராஸ்ஸிங்கை மூடாமல் இரண்டு சம்பவங்கள் நடந்து உள்ளது. தமிழனை வேலைக்கு வைத்த போது ஒரு சம்பவம் கூட நடந்ததில்லை.


KRISHNAN R
ஆக 23, 2025 14:53

இங்கேயே எல்லாம் நடக்கும்


Palanisamy T
ஆக 23, 2025 13:55

ஆதார் அட்டைகளை அவர்களுக்கு அச்சிட்டுக் கொடுத்த இவர்கள் அனைவரும் தேசத் துரோகிகள். இந்திய நாட்டையே விலைப் பேசும் இவர்களை மன்னிக்கவே கூடாது. ஒவ்வொரு மாநிலமும் இப்படி சட்டவிரோதமாக இந்திய நாட்டிற்குள் குடிப் புகுந்த இவர்களை அடையாளம் கண்டு நாடுக் கடத்தவேண்டும். இவர்களை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மக்கள் மன்னிக்கவே கூடாது.


M Ramachandran
ஆக 23, 2025 13:34

இந்திய தண்டனைய சட்டம் மாற்ற பட வேண்டும். தண்டனைகள் கடுமைய்யாக்க பட வேண்டியது அவசியம். துரோகத்திற்கு மரண தன்டனை அவசியம். அப்படியில்லாமல் சிறையில் போடுவதால் அந்த குற்ற வாளிகள் ஆட்சி மாறும் போது வெளியில் வந்து விடுகிறார்கள்.


Shivakumar
ஆக 23, 2025 12:16

இதற்காகத்தான் தேர்தல் ஆணையம் ஆதார்கார்டை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்றது. நீதிமன்றம் என்ன நினைக்கிறதோ அதை அமல்படுத்த துடிக்குது. இப்போ இதுக்கு என்ன சொல்ல போகுது.


நிக்கோல்தாம்சன்
ஆக 23, 2025 12:13

தமிழகத்தில் இவர்களை அஸ்ஸாமியர்கள் என்று கூட்டிவந்து வைக்கும் வேலை மிகவேகமாக நடைபெற்று வருகிறதே


vadivelu
ஆக 23, 2025 13:48

வடக்கன் என்று ஊரை ஏமாற்று கிறார்கள். ஏன் கொங்கு மண்டலத்தில் அதிகம் இருக்கிறார்கள்.


subramanian
ஆக 23, 2025 12:00

போலி ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், இன்ன பிற ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்பவர்கள், போலி ஆவணங்களை உபயோகித்தால் தீவிரவாதிகள் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தூக்கில் போடவேண்டும் .


Kulandai kannan
ஆக 23, 2025 11:58

காதில் ஊதுங்கள்


Balamurugan
ஆக 23, 2025 11:48

நீதிமன்றம் இவர்களை விட்டுவிடும். வாக்குரிமையும் பெற்றுவிடுவார்கள் அதை தேர்தல் கமிஷன் கண்டுபிடித்து அவர்களின் பெயர்களை நீக்கினால் உச்ச நீதிமன்றம் மீண்டும் பெயர்களை சேர்க்க சொல்லும்.


venugopal s
ஆக 23, 2025 11:42

இந்திய வங்கதேச எல்லையை ஒழுங்காக கண்காணிக்க துப்பில்லாத மத்திய பாஜக அரசுக்கு தான் தண்டனை வழங்க வேண்டும்!


vadivelu
ஆக 23, 2025 13:51

உண்மை. துப்புடன் மேற்கு வங்க அரசை தூக்கி விட்டு, இந்த அந்நிய கும்பலை திருப்பி அனுப்ப வேண்டும். இந்த அரசு இருக்கும் வரை துணிவுடன் வேலை செய்ய எல்லை பாதுகாப்பு வீரர்களை விட மாட்டார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை