ஆந்திராவில் கோர விபத்து; லாரி- அரசு பஸ் நேருக்கு நேர் மோதலில் 8 பேர் பலி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சித்தூர்; ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=89xv8ny5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருப்பதியில் இருந்து பெங்களூருவுக்கு ஆந்திர மாநில அரசு பஸ் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. சித்தூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோகிலிகாட் அருகே வந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை பஸ் இழந்தது. அதிவேகத்தில் சென்ற பஸ், எதிரே வந்த லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பஸ்சில் பயணித்தவர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்ட அவர்கள், படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். மீட்பு பணிகளை முடுக்கிவிட்டும் அவர் உத்தரவிட்டு உள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தி உள்ளார்.