உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  அடுத்தடுத்து வாகனங்கள் மீது லாரி மோதியதில் 8 பேர் பலி

 அடுத்தடுத்து வாகனங்கள் மீது லாரி மோதியதில் 8 பேர் பலி

புனே: மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலை வழியாக, மும்பையை நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று மாலை சென்றுக் கொண்டிருந்தது. நவலே பாலம் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. மற்றொரு கன்டெய்னர் லாரி மீதும் மோதியது. இரு கன்டெய்னர் லாரிகளுக்கு இடையே சிக்கிய கார் ஒன்று, அப்பளம் போல நொறுங்கியது. கார் மற்றும் கன்டெய்னர் லாரிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் எட்டு பேர் பலியான நிலையில், 15 பேர் காயமடைந்தனர். விபத்தால் மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி