திடீரென வெடித்த வெடி பொருள் 8 போலீசார் படுகாயம்
ஸ்ரீநகர்: தலைநகர் டில்லியில் உள்ள செங்கோட்டையில், சமீபத்தில், காரில் இருந்த குண்டுகள் திடீரென வெடித்து சிதறியதில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதான எட்டு டாக்டர்களில் ஒருவரான முஸாம்மில், ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார். அந்த வீட்டிலிருந்து 360 கிலோ வெடி மருந்தை பறிமுதல் செய்த ஜம்மு - காஷ்மீர் போலீசார், ஸ்ரீநகர் மாவட்டத்தின் நவ்காம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்தனர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்களின் மாதிரியை சேகரிக்க, நவ்காம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தடயவியல் நிபுணர்கள், போலீசார் நேற்றிரவு சென்றனர். அப்போது தற்செயலாக வெடி பொருட்கள் வெடித்ததில், எட்டு போலீசார் படுகாயமடைந்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அருகிலிருந்த வாகனங்களும் தீக்கிரையாகின.