உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொள்ளையர்கள் 8 பேர் கைது; 3.51 கோடி ரூபாய் பறிமுதல்; போலீசார் அதிரடி!

கொள்ளையர்கள் 8 பேர் கைது; 3.51 கோடி ரூபாய் பறிமுதல்; போலீசார் அதிரடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ஒடிசாவில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3.51 கோடி ரூபாய் ரொக்கம், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.ஒடிசா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொள்ளை சம்பவம் நடந்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்ததாக தெரிகிறது. இதன் அடிப்படையில், காளஹண்டி மாவட்டத்தில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=29bpoteq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3.51 கோடி ரூபாய், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. எந்தெந்த இடங்களில் இவர்கள் கைவரிசை காட்டினர், வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

N.Purushothaman
பிப் 03, 2025 07:04

அட விடுங்க ...திருட்டு திராவிடன் அடிக்காத கொள்ளையா? மூணு கோடி எல்லாம் அவனுங்களுக்கு ஒரு நாள் செலவு காசு .. கஷ்டப்பட்டு ஜார்கண்டுல இருந்து கிளம்பி ஒவ்வொரு மாநிலமா போயி கொள்ளையடிச்சி இருக்காங்க. அவங்களை போயி ஹிம்சிக்கலாமா ?


Barakat Ali
பிப் 02, 2025 13:50

அரசியலுக்கு வந்து குடும்பமே தலைமுறை தலைமுறையா கொள்ளையடிச்சா மக்கள் தொண்டு ன்னு பேரெடுக்கலாம் ..... தியாகக் குடும்பம் ன்னும் சொல்லுவாங்க .....


Haja Kuthubdeen
பிப் 02, 2025 15:16

செய்திக்கும் கருத்துக்கும் தொடர்பில்லை


sundarsvpr
பிப் 02, 2025 13:38

இந்த பணம் தனிப்பட்டவர்களின் பணம். தீர விசாரித்து அவர்களிடம் மீள ஒப்பட்டைப்பது தான் சரியான நடைமுறை. இயலின் அரசு கருவூலத்தில் சேர்ப்பது தவறான நெறிமுறை. அநாதை இல்லங்களுக்கு வழங்கலாம். தொகையாய் கூடாது. பொருள்களாய் வழங்கவேண்டும்.


நிக்கோல்தாம்சன்
பிப் 02, 2025 12:31

டாச்மாக்கு நாட்டின் அமைச்சர்கள் என்று தவறாக படித்துவிட்டேன்


வாய்மையே வெல்லும்
பிப் 02, 2025 12:09

அமைதி அப்பாவியா கொடும்பாவியா அய்யகோ திருட்டு புத்திக்கு எண்டு கார்டே இல்லையா ??


Kasimani Baskaran
பிப் 02, 2025 11:42

நான் தமிழ்நாடு என்று நினைத்துவிட்டேன்...


முக்கிய வீடியோ