உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lgro2150&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0*மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் அமைக்க பிரதமர் அனுமதி அளித்து உள்ளார்.*ஆந்திராவில் ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ்தவான் விண்வெளி நிலையத்தில் 3வது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.*ஸ்ரீஹரிக்கோட்டாவில், இஸ்ரோவின் அடுத்த தலைமுறை ஏவுதள வாகனங்ளுக்கான உள்கட்டமைப்பு இருப்பதையும், அங்குள்ள இரண்டாவது ஏவுதளத்திற்கு உதவும் வகையிலும் 3வது ஏவுதளம் அமைக்கப்படுகிறது. *ஏவுதளம் மற்றும் அதன் தொடர்புடைய வசதிகள் அமைக்கப்படுவதற்காக 3984.86 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. பணிகள் 4 ஆண்டுகளில் நிறைவு பெறும்.*இதன் மூலம், இஸ்ரோ அதிகளவில் விண்கலங்களை விண்ணில் செலுத்துவதற்கும், விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லவம், விண்வெளி ஆய்வு திட்டங்களுக்கும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.சம்பளக்கமிஷன் அமைக்க வேண்டும் என்று பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் சம்பளக்கமிஷன் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதிய சம்பளக்கமிஷன் பரிந்துரை அடிப்படையில் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் புதிய சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பாக சம்பள கமிஷன் அமைப்பது வழக்கம். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குழு அமைக்கப்படும் இந்தக்குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் சம்பளம், இதர சலுகைகள் உயர்வு செய்யப்படும். கடைசியாக அமைக்கப்பட்ட 7 வது சம்பள கமிஷன், மன்மோகன் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி ஆட்சியின் போது 2014 ல் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் 2016 ஜன., மாதம் அமல் செய்யப்பட்டன. அகில இந்திய ரயில்வேமேன் பெடரேசன் சங்க பொதுச் செயலாளர் ஷிவ்கோபால் மிஸ்ரா கூறுகையில், கடைசியாக அமைக்கப்பட்ட சம்பள கமிஷன் பரிந்துரை 2016 ஜன., 1ம் தேதி அமலுக்கு வந்தது. எனவே, புதிய சம்பள கமிஷன் பரிந்துரை 2026 ல் அமல் செய்யப்பட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு பிறகும், சம்பளம் உயர்த்த முடியாது என்று எந்த அரசும் மறுக்க வாய்ப்பில்லை என நம்புகின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

பெருமை

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ''மேம்பட்ட இந்தியாவை உருவாக்கும் அரசு ஊழியர்களின் முயற்சிகளுக்காக நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம். அவர்களுக்கான எட்டாவது சம்பளக்குழு தொடர்பான அமைச்சரவையின் முடிவு, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்; பொருட்கள் நுகர்வையும் கணிசமாக அதிகரிக்கும்,'' என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Venkataraman
ஜன 16, 2025 21:06

சம்பளமும் பென்சனும் உயர்வதால் பெரிய அளவில் அரசு ஊழியர்களுக்கு ஆதாயம் இருக்காது. ஏனென்றால் அதில் பாதியளவுக்கு வருமான வரி பிடிக்கப் பட்டு விடும். விலைவாசிகளும் வேகமாக ஏறிவிடுவதால் பணத்தின் மதிப்பும் குறைந்து விடும்.


Jegan
ஜன 16, 2025 20:10

அரசு ஊழியரின் சம்பளம் உயர்ந்தால், வரி உயரும் , வரி உயர்ந்தால், பொருட்கள் விலை உயரும். படித்தும் வேலை இல்லாதவன் நிலைமை , தினக்கூலி நிலைமை , தனியார் நிறுவன தொழிலாளி நிலைமை, என்னவாகும்? ஏழை மீன்டும் ஏழையாவன்,


தாமரை மலர்கிறது
ஜன 16, 2025 20:02

அரசு ஊழியர்களுக்கும் பிரைவேட் ஊழியர்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. அந்த இடைவெளி குறையும் வரை, எட்டாவது கமிஷனை தள்ளிபோட வேண்டும். வடஇந்திய படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொடுக்க, உபியில் ஒரு இஸ்ரோவை அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.


Ramaswami Sampath
ஜன 16, 2025 19:29

அடுத்த தேர்தல் சமயத்தில் நடை முறைக்கு வரும். ஓட்டு வாங்க.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 16, 2025 19:18

2026 ல் நடக்கப் போவது தமிழ் நாடு மாநில தேர்தல். சம்பள கமிஷன் அனைத்து இந்திய ஒன்றிய அரசு ஊழியர்களுக்கானது. இது கூடத் தெரியாமல் Ray என்கிற ஐ டி என்னவோ போட்டிருக்கு.


Barakat Ali
ஜன 16, 2025 19:56

அவரு உங்க கழகத்து ஆதரவாளர்தான் ..... ஆதாரம் ? பழைய கருத்துக்களைப் பாருங்க ....


veera
ஜன 17, 2025 11:43

இவர் தான் புளுகு GST ஆபீஸர்


Ray
ஜன 16, 2025 19:10

தேர்தல் வந்தாத்தானே அறிவிப்பு எதுவும் வரும் இந்த சம்பளக் கமிஷன் அறிக்கை வரவே இரண்டு ஆண்டுகளாகும் 2026 க்கு முன் வரவேண்டும் என்றுதான் நிச்சயித்திருப்பார்கள் மக்கள் பல்வேறு ஊகங்களுடன் வாக்கு சாவடிக்கு செல்வார்கள் 26 தேர்தல் முடிவைப் பொறுத்து அரசு ஊழியர் கூலி உயர்வு பிரச்சினை நிர்ணயமாகும்.


sankaranarayanan
ஜன 16, 2025 18:54

இது போன்று பப்ளிக் செக்டர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஊதிய உயர்வு 2001 ஆண்டுக்கு பிறகு நடக்கவே இல்லை. அப்போது 2001 ஆண்டு என்ன அடிப்படை சம்பளமோ அதேதான் இப்போதும் வங்கியிலிருந்து ஓய்வுபெற்றவர் அணைவரும் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் அகவிலைப்படி மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உயர்ந்துகொண்டே போகிறது.இதை கவனிப்பார் யாருமே இல்லை .அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கி ஓய்ஊதியர்கள் அனைவருமே அனாதையாக விடப்பட்டுள்ளனர்.ஆனால் ரிசர்வ் வங்கிக்கு மட்டும் 2019 வரை அடிப்படை சம்பளம் ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்குப்பின் உயர்த்தப்பட்டு உள்ளது. என்ன பாகுபாடு ஏன் இந்த திப்பிலாட்டம்.பிரதமரே தலையிட்டு இவர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை கொடுக்க உடனே காலம் தாழ்த்தாமல் ஏற்பாடு செய்ய வேண்டும்.அரசாங்கத்தின் திட்டங்களை ஒழுங்காக மக்களிடையே கொண்டு செல்லும் ஒரே வழி இந்த அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள்தான்.


Ray
ஜன 17, 2025 02:36

ரிசர்வ் வங்கிதான் மோடிக்கு 90 000 கோடி டிவிடெண்டாக அதாவது சட்டப்படியான தேர்தல் நிதி பத்திரம் வழங்குகிறது அதற்கு நிதி மந்திரி வாலாட்ட வேண்டாமா


Raman
ஜன 16, 2025 18:48

There must be some pay parity.. unfortunately private sector employees about 90 percentage are forced to work 12 hrs a day and their pay and other facilities have no match with government employees..central government must step in and ensure some pay parity and working hours and regulate accordingly...as far as deliverables, central government employees are better, however the same is not true with many state government employees, in general. Accountability must be ensured with government employees. Otherwise it would be lopsided. Cheers.


Barakat Ali
ஜன 16, 2025 18:07

இதனால் விலைவாசி எகிறும் ... தனியார் ஊழியர்களே பாவம் செய்தவர்கள் ..... கம்பெனி லாபம் குறைந்தால் இன்க்ரிமெண்ட் கட் ..... லாபம் கூடினால் அடுத்தடுத்த வருடங்களில் லாபம் கூடட்டும் .... பிறகு இன்க்ரிமெண்ட் போடுகிறோம் என்பார்கள் .....


நசி
ஜன 16, 2025 17:51

அமெரிக்கா மாதிரி 8 ஆண்டுகளுக்கு பெரிய பதவிக்கு நிர்ணயம் செய்யனும்.நாட்டில் 90 சதவீதம் வறுமையில் ஓரு வேளை‌சாப்பாட்டிற்கு தள்ளாடுறோம் ஆனால காங்கிரஸ் செய்த அரசு திறனற்ற அரசு ஊழியர்களின் சம்பளங்களையும் லஞ்சத்தையும்‌ ஊக்குவிக்கும் செயலை மோடி செய்வது பதவிக்கு பேராசையுடன்‌செய்வது போல் தோன்றுகிறது....பகவான் கருனுயுள்ளவன் என்றால இதற்குனடான தண்டனனயை யார் செய்தாலும் கொடுப்பான்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 16, 2025 19:21

என்னாது? "நாட்டில் 90 சதவீதம் வறுமையில் ஓரு வேளைசாப்பாட்டிற்கு தள்ளாடுறோம் "அப்படியா?? நசி?? என்னவோ மோடி 3.0 வில் இந்தியா அப்டியே அறுத்து தள்ளிட்டாரு, ஆச்சா போச்சா ங்கறாங்க.. நீங்க என்னடான்னா 90% க்கு சோறே இல்லை ங்கறீங்க?? பாஜக காரர்கள் திட்டப்போறாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை