உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிட்டனை சேர்ந்த 9 பல்கலைகள் இந்தியாவில் கல்வி வளாகம் தொடங்கும்: பிரதமர் மோடி அறிவிப்பு

பிரிட்டனை சேர்ந்த 9 பல்கலைகள் இந்தியாவில் கல்வி வளாகம் தொடங்கும்: பிரதமர் மோடி அறிவிப்பு

மும்பை: பிரிட்டனை சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்களது கல்வி வளாகங்களை திறக்கும் என பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மரை சந்தித்த பிறகு பிரதமர் மோடி அறிவித்தார்.மும்பை ராஜ்பவனில் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே உள்ள உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டன்- இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே இன்று கையெழுத்தான ஒப்பந்தம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். வர்த்தகத்தை அதிகரிக்கும் மற்றும் இரு நாடுகளிலும் உள்ள தொழில்கள் மற்றும் நுகர்வோருக்கு பயனளிக்கும். இந்தியாவிற்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பிரிட்டன் வர்த்தக குழுவினருடன் இந்தியாவுக்கு பிரதமர் கேர் ஸ்டார்மர் பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்தோ-பசிபிக் மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்தும், உக்ரைனில் நடந்து வரும் மோதல் குறித்தும் ஸ்டார்மர் உடன் விவாதித்தேன். பிரிட்டனை சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்களது கல்வி வளாகங்களை திறக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மகிழ்ச்சி!

மும்பையில் உள்ள ராஜ்பவனில் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மரை சந்தித்து பேசிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அவர், எனது நண்பரை வரவேற்றது மகிழ்ச்சியாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

எனது விருப்பம்

'காமன்வெல்த், ஜி20 இல் நாங்கள் ஒன்றாக அமர்ந்திருக்கிறோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அந்தஸ்து பெறுவதை நாங்கள் காண விரும்புகிறோம்' என்று பிரதமர் கேர் ஸ்டார்மர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Vasan
அக் 09, 2025 18:07

ஏன் மீண்டும் இங்கிலாந்து காரர்களை உள்ளே விடுகிறீர்கள்?அவர்கள் ஏன் அவர்களது பல்கலைக்கழகங்களை இங்கே நிறுவ வேண்டும்? வேண்டாமே இந்த விஷப்பரீட்சை.மகாத்மா காந்தி கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்தை மீண்டும் பறி கொடுக்க வேண்டாமே.


Thravisham
அக் 09, 2025 18:57

காந்தி கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி கொடுத்தாரா? கஷ்டப்பட்டு சுதந்திரம் வர காரணிகள் வஉசி, திலகர், சைபீரியாவில் சாகடிக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ், ஜாலியான்வல பாக்ஹ்ல் இறந்த எண்ணற்றவர்கள் மற்றும் பற்பலர்.


Against traitors
அக் 09, 2025 16:20

இங்கே வேலை வாய்ப்பு இல்லாமல் சவூதி, இங்கிலாண்டில் பிச்சையா எடுக்கிறார்கள்


Mr Krish Tamilnadu
அக் 09, 2025 16:15

வெளியுறவு கொள்கைகளில் வர்த்தகம், ராணுவ கூட்டு பயிற்சி, சுற்றுலா ஒ.கே. அயல்நாட்டு கல்வி இங்கு?. இந்தியாவில் உள்ள உலக பத்திரிகைகளே மத்திய அரசை மீறி, தனது சொந்த கருத்தை வெளியிடுகிறது. வர்த்தகம் என வந்தார்கள் அன்று. நமது விதிமுறைக்கு உட்பட்டு, அவர்களது வளாகங்கள் பார்ப்போம். NIT க்கு பாதிப்பு வருமா?. பரிசோதனை முயற்சி. காத்திருப்போம்.


Uthamarseeli Kattanthadi
அக் 09, 2025 17:04

வர்த்தகம் செய்து மதம் பரப்பியது பற்றாது என்று கல்வி நிலையமா? இந்தியா சொல்லட்டும் அல்லேய்லுயா..அல்லேய்லுயா...ஆமென்.


Field Marshal
அக் 09, 2025 15:54

பிரிட்டனில் நிதி நிலைமை சரியில்லை .அமேரிக்கா சென்று படிக்க மாணவர்கள் ஆர்வம் இல்லை .இந்தியாவில் கல்வி வளாகங்கள் திறந்து வேலை வாய்ப்பு எங்கே கிடைக்கும் ?


முக்கிய வீடியோ