உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊடுருவல்காரர்களுக்கு செக் : மியான்மர் எல்லையில் 9 கி.மீ., தூரம் வேலி அமைக்கும் பணி நிறைவு

ஊடுருவல்காரர்களுக்கு செக் : மியான்மர் எல்லையில் 9 கி.மீ., தூரம் வேலி அமைக்கும் பணி நிறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:ஊடுருவல்காரர்களை தடுக்கும் நோக்கில், மணிப்பூரை ஒட்டியுள்ள மியான்மர் எல்லையில் 9 கி.மீ., தூரத்திற்கு முள்வேலி அமைக்கும் பணிகள் முடிவு பெற்றுள்ளது. அங்கு சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவுகின்றனர்.மோதல்நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகியவை மியான்மருடன் 1,643 கி.மீ., துாரம் எல்லையை பகிர்கின்றன. இதன் வழியாக, லட்சக்கணக்கான அகதிகள் நம் எல்லைப் பரப்பிற்குள் நுழைவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.இதேபோல் மியான்மருடன் 400 கி.மீ., எல்லையை பகிர்ந்துகொள்ளும் மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கும், கூகி பழங்குடியினருக்கும் கடந்த ஆண்டு மோதல் வெடித்ததில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களுக்கு, மியான்மரில் இருந்து வரும் ஊடுருவல்காரர்கள் தான் காரணம் என, மாநில அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.இதை தடுக்கும் நோக்கில், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களை ஒட்டியுள்ள மியான்மர் எல்லையில், தடுப்பு வேலிகளை அமைக்கும்நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த பணி, பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலைகள் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மணிப்பூரின் மோரே பகுதியில் 9.214 கி.மீ., தூர எல்லையில் முள்வேலி கம்பிகள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. முள்வேலியை ஒட்டி சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. மேலும் 20.862 கி.மீ., தூரத்திற்கு முள்வேளி மற்றும் சாலைகள் அமைக்கும் பணி பி.ஆர்.ஓ., அமைப்பிடம் கடந்த ஆண்டு பிப்., மாதம் ஒப்படைக்கப்பட்டது. அப்பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

எல்லை நிர்ணயம்

இந்தியா மியான்மர் எல்லையில் மொத்தம் 1,643 கி.மீ., தூரத்தில் 1,472 கி.மீ., தூரத்திற்கு எல்லை நிர்ணயம் செய்யும் பணி முடிவடைந்துள்ளது. நவீன முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்கான திட்டங்கள் ஒன்று அருணாச்சல பிரதேச மாநிலத்திலும், மற்றொன்று மணிப்பூர் மாநிலத்திலும் நடந்து வருகிறது. இந்த பணிகளை அசாம் ரைபிள்ஸ் படையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rpalni
ஜன 03, 2025 07:46

கேடு கெட்ட ஹமாஸ் /ஹெஸ்பொல்லாஹ் பயங்கரவாதிகள் பூமிக்கடியில் சுரங்கங்களை பயன்படுத்தினர். அதை போல இவர்கள் செய்கிறார்களா என்று கவனிங்க


KRISHNAN R
ஜன 02, 2025 21:26

எப்படியும் அண்டர் கிரவுண்டில் கூட கவனமாக இருக்க வேண்டும்


Kasimani Baskaran
ஜன 02, 2025 17:03

எல்லை முழுவதும் வேலி அமைக்க வேண்டும். இல்லை ஏற்கனவே பிரச்சினையில் இருக்கும் மியான்மரில் இருந்து வருவோரை கட்டுப்படுத்த முடியாது.


Nandakumar Naidu.
ஜன 02, 2025 16:58

அதே போல மிக முக்கியமாக இந்திய - பங்களாதேஷ்ன் எல்லை முழுவதையும் மிகவும் தரமான உயரமான ஊடுருவல் செய்ய முடியாத வேலி அமைக்க வேண்டும். தேச, சமூக மற்றும் ஹிந்து விரோதிகள் அதிகமாக இந்தியாவிற்குள் நுழை இந்த ஏல்லையில் தான்.


முக்கிய வீடியோ