உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தியேட்டர் நெரிசல் சம்பவம்; தாய் இறந்த நிலையில் மகன் மூளைச்சாவு; சிக்கலில் அல்லு அர்ஜூன்

தியேட்டர் நெரிசல் சம்பவம்; தாய் இறந்த நிலையில் மகன் மூளைச்சாவு; சிக்கலில் அல்லு அர்ஜூன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: புஷ்பா 2 படம் வெளியான திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவக்குழுவினர் அறிவித்துள்ளனர். டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில், இயக்குநர் சுகுமார் கைவண்ணத்தில் உருவான புஷ்பா 2 என்ற படம் அண்மையில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் வசூலில் சக்கை போடு போடுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hmsab8mw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அண்மையில் புஷ்பா 2 படம் வெளியான தியேட்டர் ஒன்றுக்கு நடிகர் அல்லு அர்ஜூன் படக்குழுவினருடன் பிரிமியர் ஷோவுக்கு வந்தபோது பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண், தமது 9 வயது மகனுடன் கூட்டத்தில் சிக்கினார். ரேவதி உயிரிழந்துவிட, மகன் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பெரும் பரபரப்பான இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு 24 மணிநேரத்தில் ஜாமினில் விடப்பட்டார். இந் நிலையில் இந்த சம்பவத்தின் அடுத்த அதிர்ச்சியாக சிகிச்சையில் இருந்த 9 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறுவன் சேர்க்கப்பட்டு உள்ள மருத்துவமனைக்கு ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஆனந்த், தெலுங்கானா சுகாதாரத்துறை செயலாளர் கிறிஸ்டியானா உள்ளிட்டோர் சென்றனர். அங்கு சிறுவனின் உடல்நிலை குறித்து மருத்துவக்குழுவிடம் பேசினர்.பின்னர் அவர்கள் கூட்டாக நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது; சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டார். கூட்ட நெரிசலில் சிக்கிய அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது. எனவே அவர் குணம் அடைய நீண்ட காலம் பிடிக்கும். சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.விரைவில் இதுகுறித்த விரிவான அறிக்கையை அவர்கள் வெளியிடுவார்கள். செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிறுவன் மருத்துவமனையில் உள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் ஏற்கனவே சிக்கலில் உள்ள நிலையில் சிறுவன் மூளைச்சாவு அடைந்திருப்பது பெரும் நெருக்கடி ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

அப்பாவி
டிச 18, 2024 19:27

கூத்தாடி பின்னால் போய் சாவுறவங்க மீது கருணை எதுக்கு இரக்கம் எதுக்கு?


பாலா
டிச 18, 2024 18:33

இப்படி சினிவமாகாரங்க பின்னாடி போற காலம் 80./90 களில் இருந்ததாக சொன்னால் நம்பலாம் இப்போ எல்லாம் காசு குடுத்து கூட்டியாரதா சொல்ரானுவோ அப்படி இருக்க சொல்லோ இது எப்படி அதுவும் குழந்தையை வெச்சுகிட்டு வௌங்க மாட்டேங்குதே


என்றும் இந்தியன்
டிச 18, 2024 17:55

ஆகவே 67 பேர் கள்ளக்குறிச்சியில் இறந்ததற்கு காரணம் டாஸ்மாக்கினாட்டின் அமைச்சர்கள் முதலமைச்சர் ஆகவே அவர்களுக்கு அல்லு அர்ஜுனை என்ன செய்கின்றதோ போலீஸ் அதே செய்யவும் உடனே என்ன ஹை கோர்ட் சுப்ரீம் கோர்ட் சரிதானே


Senthoora
டிச 18, 2024 17:10

சொல்லாமல் வந்தார், சோ எப்படி இப்படி கூட்டம். கணவனை முதலில் ஜெயிலில் போடுங்க. இப்படியா குடும்பம் நடத்துவது. இதொரு நல்ல பாடம், உடனடியாக ரசிகர் மன்றங்கள் கலைக்கப்படணும். முதல் நாள் ஸ்பெஷல் காட்சிகள் நிறுத்தப்படணும். டிக்கெட் முன்கூட்டியே வாங்கியவர்கள் உள்ளே விடணும், வாங்காதவர்கள், 500 மீட்டர் தூரத்தில் தியேட்டரில் இருந்து நிறுத்தப்படணும். செவிங்களா? செய்விங்களா?


Gokul Krishnan
டிச 18, 2024 17:04

ஆந்திரப் பிரதேசம் தெலங்கானா தமிழ் நாடு சினிமா வெறி பிடித்த பைத்தியங்கள் சினிமாக்காரன் கக்கூஸ் போவது கூட சில கேடு கேட்ட மீடியாவில் தலைப்பு செய்தி முக்கிய செய்தி


வைகுண்டேஸ்வரன் V
டிச 18, 2024 16:15

மடத்தனம். அறிவுகெட்டத்தனமா இதுங்க போயி கூட்டத்தில் மாட்டி செத்துப் போனதுக்கு அந்த நடிகர் என்ன செய்வான்?? இதில் நீதிமன்றம் கூட தவறு செய்கிறது. இந்த மாதிரி இழப்புக்கெல்லாம் அரசாங்கமோ, விழா நடத்துபவரோ பொறுப்பல்ல என்று ஒரே வரியில் மனுவை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும்.


திகழும் ஓவியன், Mumbai
டிச 18, 2024 20:37

ஆமா வை குண்டர். 200 ரூவா ஊஃபீஸ்க்கு இருக்குற அறிவை விட மக்களுக்கு அறிவு ஜாஸ்தி. நீர் பேசாமல் உன் முட்டு குடுக்கும் கடமையை செய்யும்


மொட்டை தாசன்...
டிச 18, 2024 15:46

நடிகர்களுக்கு நடிப்பு என்பது அவர் தொழில், பட வசூலுக்காகவும் விளம்பரத்திற்க்காகவும் அல்லு அர்ஜுன் சினிமாதியேட்டருக்கு வந்துள்ளார். ஆனால் இந்த படத்தை குடும்பத்தோட தியேட்டரில் முண்டியடித்துக்கொண்டு போகுமளவுக்கு நம் வாழ்க்கைக்கு அவ்வளவு முக்கியமா ? இப்போது இழப்பு இறந்தவரின் குடும்பத்தாருக்கு தான். சினிமா என்பது ஒருபொழுதுபோக்கிற்காக மட்டுமே அதுவே வாழ்க்கையின் ஒரு அங்கமாக கருதினால் கதி இதுதான் .


Anantharaman Srinivasan
டிச 18, 2024 14:37

அந்தளவுக்கு சினிமா வெறி. விதி தன் கடமையை முடித்தது. நடிகரை சொல்லி குற்றமில்லை. அவர் வராமல் தவிர்திருக்கலாம். அப்பொழுதும் மரணம் ஏற்பட்டிருந்தால் யாரை குற்றம் சொல்வார்கள்.??


Mohan
டிச 18, 2024 14:10

நடுவில் கொஞ்சகாலம், தமிழ் ராக்கர்ஸ்.காம் என்பவனின் கைங்கரியத்தால், முதல் நாள் முதல் ஷோ, ஸ்பெஷல் ஷோ இதற்கெல்லாம் கூட்டம் வருவது குறைந்து இருந்தது. இப்பொழுதோ எந்த படமும் 10 நாள் அல்லது அதிகம் போனால் 15 நாட்கள் மட்டுமே ஓடுகிறது. அதன் பின் ஓ.டிடி தளத்தில் ரிலீஸ் ஆகிவிடுவதால் சிக்கல் குறைகிறது. புஷ்பா2 மாதிரி லாஜிக் இல்லாத கொலைவெறி ஆட்டம் அதிகமுள்ள சினிமா ஆண் ரசிகர்களின் விருப்பமாக இருந்தது. இந்த சிக்கல் பிடித்த இண்டர்நெட்டின் கைங்கரியத்தாலும், முட்டாள்தனமான ரசிகர்களாலும் , இந்த பட ஹீரோக்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அளவுக்கு மீறி, சிறுவர்களையும் பிடித்துக் கொண்டால், இந்த நிலை தான். என்ன சால்ஜாப்பு சொன்னாலும் அல்லு அர்ஜூன் செய்தது தவறு தான். தண்டனை தந்தே ஆக வேண்டும்.


Kogulan
டிச 18, 2024 14:04

காலம் மாறிகொணடிருக்கிறது நாமும் கவனமாக இருக்கவேண்டும், விஷமும் விற்பனை பொருள்தான் விபரம் தெறிந்துகொள்வது அவசியம், தீவிர ரசிகையாயினும் உயிரைப்பணையம் வைக்கவேண்டிய அவசியம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை