உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாளில் 96,000 பக்தர்கள்; சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம்!

ஒரே நாளில் 96,000 பக்தர்கள்; சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பத்தினம்திட்டா; சபரிமலையில் வரலாறு காணாத நிகழ்வாக நேற்று(டிச.,19) ஒரே நாளில் 96,007 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.சபரிமலையில் நவம்பர் 16ம் தேதி மண்டல பூஜை யாத்திரை தொடங்கியது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 41 நாட்கள் நிறைவாக டிச.26ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. மண்டல பூஜைக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், அங்கு நாள்தோறும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.இந் நிலையில் வரலாறு காணாத வகையில் நேற்று (டிச.19) மட்டும் 96,007 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். தினமும் 70,964 பேர் தரிசனத்துக்கு முன்பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் முன்பதிவுக்கான எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வித வசதிகளும் செய்யப்பட்டு வருவதாகவும், போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் கூறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

SUBRAMANIAN P
டிச 21, 2024 14:20

இதுல பாதிக்கு மேல உண்மையான ஐயப்ப பக்தில சபரிமலை போனவங்களா இருக்காது. சும்மா ஜாலி பிக்குனிக்கு போனவங்களா இருப்பாங்க. நானும் போறேன் சபரிமலைக்குனு. உண்மையான தெய்வ நம்பிக்கை, பக்தி உள்ளவங்க 0.5% க்கும் கம்மி. இதுலயும் நிறையபேர் இந்து கடவுளை வசைபாடும் கட்சியை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அது வயித்துபிழைப்புக்கு. சாமி கும்பிடுவது நல்லவன்னு வெளிவேஷம் போடுவதுக்கு. சபரிமலைக்கு மாலை போட்டாலும் வழக்கம் போலவே செயல்படுவது. அதுக்குன்னு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கு. அதை சுத்தமா கடைபிடிப்பது கிடையாது.. என்ன சொல்லி என்ன...


சிவா. தொதநாடு.
டிச 21, 2024 11:36

காமெடி பீசுகளா திரும்ப வந்து திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடுங்க


RAMAKRISHNAN NATESAN
டிச 21, 2024 09:35

இப்படியே போனா சனாதனத்தை எப்படி ஒழிக்கிறது துணை முதல்வரே ????


V வைகுண்டேஸ்வரன்
டிச 21, 2024 13:54

அது தான் தொதா நாடு சிவா போன்றவர்கள் ஐயப்ப பக்தர்களை காமெடி பீசுகள் னு சொல்றாரே, அப்புறம், திருப்பொருரில் முருகன் கோவில் உண்டியலில் தவறி விழுந்த ஐ போனை உரிமையாளரிடம் தர முடியாது ன்னு கோவில் பூசாரிகள் சொல்றாளே, போலீஸ் வந்து நாலு போட்டு போனை வாங்கித் தரும். இந்த மாதிரி ஆளுங்க இருக்கிறவரை சனாதனம் எங்கே போய் உருப்பட? அழிந்து விடும். இல்லைன்னாலும் அவர்களே அழித்து விடுவார்கள். சனாதனம் காணாமல் போக ஆரம்பித்து விட்டது.


AMLA ASOKAN
டிச 21, 2024 09:20

இவ்வளவு பெரிய கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்ப்பட்டு யாரவது கீழே விழுந்தால் தள்ளிவிட்டவரை எப்படி கண்டுபிடிப்பார்கள் ?


PARTHASARATHI J S
டிச 20, 2024 22:27

பக்தி அதிகமாயிடுச்சு.


முக்கிய வீடியோ