உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.85,000 கோடியில் 97 தேஜாஸ் போர் விமானங்கள்; மத்திய அரசு ஒப்புதல்

ரூ.85,000 கோடியில் 97 தேஜாஸ் போர் விமானங்கள்; மத்திய அரசு ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரூ.85,000 கோடியில் இந்திய விமானப் படைக்காக 97 புதிய தேஜாஸ் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில், 97 இலகுரக தேஜாஸ் போர் விமானங்களும், 6 மேம்பட்ட வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களை ரூ. 85,000 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய அரசு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தேஜாஸ் விமானங்களின் கொள்முதல் விலை ரூ. 67,000 கோடியாகவும், வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களின் விலை ரூ. 18,000 கோடியாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்திய விமானப்படையில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் மிக்-21 ரக போர் விமானங்களுக்குப் பதிலாக, தேஜஸ் மார்க் 1ஏ ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. முன்பு, கடந்த 2021 பிப்ரவரியில், இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் எம்கே-1ஏ விமானங்களை கொள்முதல் செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் உடன் ரூ. 48,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 97 புதிய தேஜாஸ் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு பெரும் உந்துதல் அளிக்கும் வகையில் தேஜாஸ் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

N.Purushothaman
ஆக 21, 2025 06:43

இந்தியாவிற்கு ராணுவ பலம் நிச்சயம் தேவை ..கிழக்கு மற்றும் மேற்கில் துரோகிகள் நமது அண்டைவீட்டார்களாக உள்ளனர் .


M Ramachandran
ஆக 21, 2025 01:38

ட்ரம்ப் அல்ல ராகுல் தான் கதற ஆரம்பிப்பார்.


JaiRam
ஆக 20, 2025 23:34

ட்ரம்ப் கதற ஆரம்பித்து விடுவார்


Tamilan
ஆக 20, 2025 23:20

நாட்டை ரணகளப்படுத்துவதுதான் இந்துமதவாத அரசின் நோக்கம்


vivek
ஆக 21, 2025 06:02

அவளோ பயம் இருந்தால் உன் வீட்டு கட்டிலுக்கு அடியில் போய் ஒளிந்துகொள்ளுங்க


Tamilan
ஆக 21, 2025 08:48

பயந்து போயுள்ள கும்பலுக்கு இரையானது மக்கள் பணம் 85000 கோடி


SUBBU,MADURAI
ஆக 21, 2025 09:58

எதுக்கு கட்டிலுக்கு அடியில் ஒளியணும் அவனுகளோட டொப்பிள் கொடி நாட்டுக்கு விரட்டி விட்ற வேண்டியதான்


ManiMurugan Murugan
ஆக 20, 2025 23:12

அருமை இராணுவ பலம் அவசியம்


Thravisham
ஆக 20, 2025 23:09

மேக் இன் இந்தியா சூப்பர் டேக் ஆப்


முக்கிய வீடியோ