உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 9ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை: சிறுவன் கொடூரம்

9ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை: சிறுவன் கொடூரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹூப்பள்ளி: கர்நாடகாவில், ஒன்பதாம் வகுப்பு மாணவரை ஆறாம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்த, 15 வயது மாணவரும், இவரது எதிர்வீட்டில் வசிக்கும், ஆறாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனும் நண்பர்கள். தினமும் சேர்ந்து விளையாடுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும், வேறு சில நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். கடை போன்ற, 'செட்டப்' செய்து வியாபாரம் செய்யும் விளையாட்டு விளையாடினர். அப்போது ஏதோ காரணத்தால், ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கும், எதிர் வீட்டு சிறுவனுக்கும் சண்டை வந்து, வாக்குவாதம் நடந்தது.கோபமடைந்த சிறுவன், தன் வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவரின் வயிற்றில் ஓங்கி குத்தினார்.ரத்த வெள்ளத்தில் விழுந்த மாணவரை, அருகில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஹூப்பள்ளி - தார்வாட் போலீஸ் கமிஷனர் சசிகுமார் அளித்த பேட்டி:கொலை செய்த சிறுவனும், கொலையான சிறுவனும் நண்பர்கள். ஒரே தட்டில் உணவு சாப்பிடுவர் என, குடும்பத்தினர் கூறுகின்றனர்.ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு, கத்தியால் குத்தி கொலை செய்யும் மனநிலை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அந்த சிறுவன் என் இடுப்பு உயரம்கூட வளரவில்லை. பிள்ளைகள் விஷயத்தில் பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தமிழ்வேள்
மே 14, 2025 09:31

வரைமுறை இல்லாத இறைச்சி உணவு குறிப்பாக ஹலால் முறையில் வெட்டப்பட்ட இறைச்சி மனத்தில் வன்முறையை விதைக்கும்... இரத்தம் இழந்து துடித்து இறக்கும் மிருகத்தின் ஒவ்வொரு செல்லிலும் பழி வாங்கும் வெறி வன்மம் நிறைந்துள்ளது.அது அதனை உண்ணும் மனிதனின் குணத்தில் நிச்சயம் மாற்றம் உண்டு பண்ணும்.


மூர்க்கன்
மே 15, 2025 16:33

நீ என்ன உண்கிறாய் இப்படி விஷத்தை மட்டுமே கக்கி கொண்டு இருக்கிறாய் தொமிழ் வாள் ?? உன்னுடைய உணவு பழக்கம் என்னவென்று புரிகிறது?? பல லட்சம் பேரை கொன்றுஒழித்த ஹிட்லர் சாட்சாத் சைவம்


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 14, 2025 06:31

குத்தினவன் மர்ம மாணவனா ??


சூரியா
மே 14, 2025 06:25

சினிமா மற்றும் டெலிவிஷன் தொடர்களின் தாக்கம்.


Palanisamy Sekar
மே 14, 2025 04:14

சினிமா ஹீரோக்களை இன்னும் பலவேறு ஆயுதங்களை பயன்படுத்தி ஒரே சமயத்தில் கத்திகளை கொண்டு சதக் சதக் என்று குத்தி கொலை செய்கின்ற வீரத்தை அனுமதிக்கட்டும் சென்சார் போர்டுகள். ஒரு கொலை நடந்தாலே ஆயிரம் முறை விசாரணை கைது என்று சிரமப்படுவதை காட்டுவதில்லை. பல கொலைகளை சினிமாவில் செய்வார்கள்... பல தடியன்களை கையை காலை வெட்டி ரத்தம் சொட்ட சொட்ட விரட்டுவார்கள் ஆனால் போலீஸ் விசாரணை என்று ஏதுமே இல்லை. அதனை நிஜம் என்று எண்ணிய சிறுவர்களின் மனதில் ஊறிய சம்பவமே இந்த மாதிரியான கொலைக்கு காரணம். ஹீரோக்களை மனதில் வைத்துக்கொண்டு இப்படி செய்திருப்பான் சிறுவன். சமூக அக்கரையில் சினிமாவின் பங்கானது ஆட்சியாளர்கள் செய்கிற தகுடு திகிதங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடுகின்றது. ஆட்சியாளர்கள் சரியில்லை என்றால் இப்படித்தான். இங்கேயும் சளைத்த சிறுவன். கூட்டம் ஏராளம். சில சம்பவங்கள் எங்களின் ஸ்டாலின் ஆட்சியிலும் நடக்கின்றது. சற்றே வயது வித்தியாசத்தை தவிர உயிர் போகாத அளவுக்கு நடந்துள்ளது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 14, 2025 11:48

இது தான் நிஜம். சினிமா கூத்தாடிகள் தான் இதற்கு முதல் காரணம். இதே போல தொலைகாட்சியில் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் குழந்தைகளை காதல் பாடல்கள் பாட வைத்து அதை வயதான கிழவன் கிழவிகள் புகழ்ந்து கொண்டு இருப்பது எங்கே சென்று முடியும் என்று தெரியவில்லை. அதற்கு அக்குழந்தைகள் தாய் வடிக்கும் ஆனந்த கண்ணீர் குளோசப்பில் காட்டி டிஅர்பி ரேட் எகிற விடுவார்கள் பாருங்கள் அது தான் ஹைலைட்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை