உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாமாவுடனான திருமணத்தை தடுத்து நிறுத்திய 14 வயது சிறுமி

மாமாவுடனான திருமணத்தை தடுத்து நிறுத்திய 14 வயது சிறுமி

பீதர் : தாய்மாமாவுடன் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி பீதரை சேர்ந்த 14 வயது சிறுமி, மற்ற சிறுமியருக்கு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார்.இதுதொடர்பாக, பீதர் மாவட்டம் மாநில குழந்தைகள் உரிமை, பாதுகாப்புத் துறை உறுப்பினர் சசிதர் கோசம்பே கூறியதாவது:பீதர் மாவட்டம், பசவகல்யாணைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி, என்னை மொபைல் போனில் தொடர்பு கொண்டார்.சில மாதங்களுக்கு முன்பு இச்சிறுமி படிக்கும் பள்ளிக்குச் சென்றிருந்தேன். அப்போது, 'உங்களுக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட ஏதாவது பிரச்னை என்றால், குழந்தைகள் உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்' என கூறியிருந்தேன்.அதை நினைவில் வைத்திருந்த சிறுமி, என்னை தொடர்பு கொண்ட கூறுகையில், 'சில ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை மரணமடைந்தார். என் தாய் தான், விவசாய நிலத்தில் கூலி வேலை செய்து என்னை படித்து வைக்கிறார். எனக்கு மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன் உள்ளனர்.அரசின் சலுகைகள் கிடைக்கும் என்பதற்காக, எங்களை, எங்கள் தாய் படிக்க வைத்தார். ஆனால் வறுமையால், எனது மூன்று சகோதரிகளுக்கும், அவர்களின் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டனர்.என்னையும், என் தாயின் ஒன்பது சகோதரர்களில், 25 வயது தாய்மாமாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துவிட்டார்.எனக்கு படிப்பதில் தான் விருப்பம் உள்ளது. எனது சொந்த காலில் நிற்க வேண்டும் என்று கூறினேன். ஆனால், எனது தாயும், உறவினர்களும் ஒப்புக் கொள்ளவில்லை. எனவே தான் உங்களை தொடர்பு கொண்டேன்' என்றார்.உடனடியாக தாசில்தார் தத்தாத்ரேயா, தாலுகா பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி ரமேஷ் சுல்பி, பிளாக் கல்வி அதிகாரி சிவருத்ரய்யா, எஸ்.ஐ., ஜெயஸ்ரீ, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கவுரிசங்கர் ஆகியோர் செப்., 22ம் தேதி கிராமத்துக்கு சென்றோம்.சிறுமியின் தாய், தாய்மாமா, கிராமத்தின் பெரியவர்களை சந்தித்துப் பேசினோம். சிறுமியருக்கு திருமணம் செய்து வைத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தோம். 'சிறுமி பெரிய பெண்ணாக ஆகும் வரை திருமணம் செய்து வைக்கக் கூடாது' என உத்தரவிட்டுள்ளோம்.அதுவரை மாதந்தோறும் இக்குடும்பத்துக்கு 4,000 ரூபாய் நிதியுதவி வழங்கும்படி, குழந்தைகள் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ