உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கன்வார் யாத்திரையில் 150 கி.மீ., துார பயணம்: கணவரை தோளில் சுமந்த நம்பிக்கை பெண்

கன்வார் யாத்திரையில் 150 கி.மீ., துார பயணம்: கணவரை தோளில் சுமந்த நம்பிக்கை பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹரித்வார்: உ.பி.,யை சேர்ந்த ஒரு பெண், கன்வார் யாத்திரையில், முடங்கிப்போன தனது கணவரை தோளில் சுமந்து 150 கி.மீ., துாரம் பயணம் செய்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது.கன்வார் யாத்திரை தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. சிவபெருமானுக்கு பக்தி செலுத்தும் புனித சவான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் இந்த புனித யாத்திரையின் போது, ஆயிரக்கணக்கான கன்வாரியர்கள் புனித கங்கை நீரை எடுத்து மகாதேவருக்கு வழங்க நீண்ட தூரம் பயணம் செய்கிறார்கள். அப்படி பயணம் செய்த்வர்களில் உ.பி., மாநிலத்தின் மோடி நகரில் உள்ள பக்கர்வா கிராமத்தை சேர்ந்த ஆஷா என்ற பெண், தனது இரண்டு இளம் குழந்தைகளுடன், ஆஷா தனது கணவர் சச்சினை சுமந்துகொண்டு ஹரித்வாரில் இருந்து மோடிநகருக்கு கால்நடையாகப் பயணத்தைத் தொடங்கினார். கணவர் சச்சினுக்கு கடந்த ஆண்டு நடந்த முதுகுத் தண்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு இடுப்பு முதல் கீழ் வரை செயலிழந்து போனது.இந்நிலையில் தனது கணவர் சச்சின் ஒரு நாள் மீண்டும் தன் காலில் நிற்க முடியும் என்ற நம்பிக்கையுடன், முடங்கிப்போயிருந்த கணவரை முதுகில் சுமந்து 150 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தார். ஆஷா தனது கணவர் சச்சினை முதுகில் சுமந்து செல்லும் காட்சியை சிலர் வீடியோவாக எடுத்து சமூக ஊடங்கங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரின் கவனத்தை ஈர்த்தது.அந்த கணவர் அதிர்ஷ்டசாலி என்று பாராட்டிய நெட்டிசன்கள், அந்தப் பெண்ணின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் பக்தியைப் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ram RV
ஜூலை 23, 2025 00:23

கன்வர் அல்ல. கா(ன்)வட். ('ன்'னை முழுமையாக உச்சரிக்கக் கூடாது.) நாம் காவடி என்று சொல்வதைத்தான் அவர்கள் கா(ன்)வட் என்கிறார்கள். வட இந்தியாவில் 'ட' வுக்கு Rஐயும் 'த'வுக்கு Dஐயும் உபயோகிக்கிறார்கள். மோதி என்ற பெயர் நம்மூரில் மோடியானதும் இப்படித்தான்.


tamilvanan
ஜூலை 22, 2025 19:53

ஒரு கை வண்டியில் வைத்து இழுத்து வராமல் இது என்ன? வேண்டுதலா அல்லது புகைப்பட விளம்பரமா? நம்மூரில் கைவண்டிகள் எளிதில் கிடைக்கின்றனவே. அல்லது ஒரு பலகையில் சக்கரங்களை இணைத்து எளிதில் இழூக்கலாமே.


kumaran
ஜூலை 22, 2025 19:42

கருணை வடிவான இறைவா இவரது நம்பிக்கை வெல்லட்டும். வாழ்த்துக்கள் சகோதரி


Ayyasamy
ஜூலை 22, 2025 19:37

Respect to you lady Hope god will help you and your husband.


sankaranarayanan
ஜூலை 22, 2025 18:58

கணவரின் ஆசிகளும் சிவபெருமானின் ஆசிகளும் இந்த பெண்ணிற்கு நிறைய கிடைக்க நாம் அனைவருமே பிரார்த்தனை செய்துகொள்வோமாக பெண் குலத்திற்கு ஒரு விளக்காக திகழ்கிறார் இவர்


A P
ஜூலை 22, 2025 17:22

பக்தர்களுக்கு அது கன்வர் யாத்திரை ஆனால் இந்த பக்தைக்கு இது கணவர் யாத்திரை சனாதன தர்மம் இந்தப் பெண்ணுக்கு நன்றாக அத்துப்படி போலும். எவ்வளவு பக்தி ஸ்ரத்தையுடன் கணவனுக்கு மனதார சேவை செய்கிறாள். பாராட்டுக்கள். ஸ்வர்கத்துக்கும் மேலான மோக்ஷத்தில் இவளுக்கு கண்டிப்பாக அந்த இறைவன் இடமளிப்பான்.


திருமூர்த்தி
ஜூலை 23, 2025 10:02

இது இந்து தர்மம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை