உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய உயிரியல் பூங்காவில் நீர் யானை குட்டி ஈன்றது

தேசிய உயிரியல் பூங்காவில் நீர் யானை குட்டி ஈன்றது

புதுடில்லி:புதுடில்லி தேசிய உயிரியல் பூங்காவில், நான்கு ஆண்டுகளுக்குப் பின், நீர்யானை குட்டி பிறந்துள்ளது.இதுகுறித்து, புதுடில்லி தேசிய உயிரியல் பூங்கா இயக்குனர் சஞ்சீத் குமார் கூறியதாவது:உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் ஒன்பது வயது நீர் யானை, 19ம் தேதியன்று பெண் குட்டி ஈன்றது. இது, அதனுடைய மூன்றாவது குட்டி. கடைசியாக, 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குட்டியை ஈன்றிருந்தது.தாயும் குட்டியும் பெரும்பாலும் நீருக்கடியில்தான் இருக்கின்றன. குட்டி ஈன்ற பின்ற தாயும் குட்டியும் தனி குளத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் பூங்கா ஊழியர்கள் வாயிலாக கண்காணிக்கப்படுகின்றன.குட்டி ஈன்ற தாய் நீர் யானை ஆரோக்கியமாகவே இருக்கிறது. இந்தக் குட்டி வாயிலாக புதுடில்லி தேசிய உயிரியல் பூங்காவில், நீர் யானைகள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை