உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அர்ப்பணிப்போடு செயல்படும் இயக்கம்: ஆர்.எஸ்.எஸ்.,க்கு பிரதமர் மோடி வாழ்த்து!

அர்ப்பணிப்போடு செயல்படும் இயக்கம்: ஆர்.எஸ்.எஸ்.,க்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஆர்.எஸ்.எஸ்., எப்போதும் நாட்டிற்காக, அர்ப்பணிப்போடு இயங்கும் இயக்கம். நூற்றாண்டை கடந்துள்ள அதன் பணி சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்' என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:விஜயதசமி திருநாளான இன்று, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் இன்று ஆற்றிய உரையில், ஆர்.எஸ்.எஸ்., 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த ஆண்டு முக்கியமானது. நமது நாடு தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறைகளில் முன்னேறி வருகிறது என்றார்.இந்த உரை மிகவும் முக்கியம் வாய்ந்தது.பா.ஜ.,வில் சேர்வதற்கு முன் நான், ஆர்.எஸ்.எஸ்., பிரசாரகராக இருந்தேன். அந்த அமைப்பின் உறுதியும் அர்ப்பணிப்பும் ஒவ்வொரு தலைமுறையையும் ஊக்குவிப்பதாக உள்ளது. முன்னேறிய இந்தியா (விக்சித் பாரத்) என்ற இலக்கை அடைவதில் எனக்கு, புதிய ஆற்றலைப் புகுத்துவதாகவும் அமைகிறது.இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 12, 2024 22:28

வேறு வேறு பெயர்களில் செயல்படும் மார்க்க பயங்கரவாத இயக்கங்கள் ஆர் எஸ் ஸ் ஐ விட அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள் .....


கிஜன்
அக் 12, 2024 21:24

கலைஞர் கூட ...நான் தி.மு.க வில் சேரவில்லை என்றால் கம்யூனிஸ்ட்ஆக இருந்திருப்பேன் என்பார் ...


ஆரூர் ரங்
அக் 12, 2024 21:38

மீதியையும் சொல்லுங்க .நான் சிலுவை அணியாத கிறிஸ்தவன், கைலி அணியாத முஸ்லிம். ஒரு கையில் திராவிட நாடு கொடி யும் மறு கையில் ஜின்னா முஸ்லிம் லீக் கொடியையும் ஏந்தி இரு விடுதலைக்கும் குரல் கொடுத்தவன்.. ஆக அவர் ஒரு பல வேஷக்காரசாமி. அதாவது முன்னாள் சீமான்.


Kasimani Baskaran
அக் 13, 2024 06:38

கலைஞர் என்பதன் பொருள் நடிகன். நடிகன் எந்தப்பாத்திரத்தை வேண்டுமானாலும் ஏற்று நடிக்கலாம். ஆனால் அடிப்படை குணம் மாறாது. வனவாசம், மரண சாசனம் மற்றும் விசாரணை கமிஷன் அறிவிக்கை போன்றவற்றை படித்தால் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ள முடியும்.