உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நகராமல் நங்கூரம் போல் நிற்கும் காற்றழுத்த தாழ்வு; வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்

நகராமல் நங்கூரம் போல் நிற்கும் காற்றழுத்த தாழ்வு; வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது' என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடலில், நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது.அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். இதன் காரணமாக, வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்கள், இதர மாவட்டங்களில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் டிச., 24ம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும், ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sidharth
டிச 19, 2024 16:33

இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? நியோகத்தில் ஜனித்த சங்கிகள் கிடுக்கி பிடி கேள்வி


sundarsvpr
டிச 19, 2024 13:45

சென்னையில் கன மழை பெய்கிறது. உண்மை. தமிழக அமைச்சர்களின் வீடுகளில். . ஆனால் நமக்கு தெரியாது.


Ananth A
டிச 19, 2024 13:16

விழுப்புரம் மாவட்டத்திற்கு தெற்கிலும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வடக்கிலும் உள்ள இடைப்பட்ட இடங்களில் மழை பெய்ய எதிர்பார்த்த வண்ணம் உள்ளோம்....


V. SRINIVASAN
டிச 19, 2024 12:40

சென்னையில் வெயில் அடிக்கிறது 2 மணி நேரமா மழை நின்று விட்டது


Ananth A
டிச 19, 2024 13:18

வடசென்னையிலும் அப்படி தானா?


முக்கிய வீடியோ