உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீதியை ஏற்படுத்தும் அரசு!

பீதியை ஏற்படுத்தும் அரசு!

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்தால், நாடு முழுதும், சமையல் காஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோலிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவற்றின் போதுமான கையிருப்பை மத்திய அரசு முன்கூட்டியே உறுதி செய்திருக்க வேண்டும். அதை விடுத்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்., கட்சி

தவறான கொள்கை!

மத்தியில் ஆளும் பா.ஜ.,வின், 11 ஆண்டு கால ஆட்சியில், அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டன. தற்போது சமையல் காஸ் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் இன்னும் எவ்வளவு தான் பொறுத்துக் கொள்வர்? எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம். பிரியங்கா லோக்சபா எம்.பி., - காங்., கட்சி

துரதிருஷ்டம்!

ஹிந்துக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையில், 'கோமியம்' குறித்து காங்., - எம்.பி., ராகுல் இழிவாக பேசி உள்ளார். பயங்கரவாதிகளின் குரலாக அவர் எதிரொலிக்கிறார். அவரால் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. ராகுல் போன்ற எதிர்க்கட்சித் தலைவர் கிடைத்துஇருப்பது துரதிருஷ்டம். அமித் மாள்வியா ஐ.டி., பிரிவு செயலர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை