உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அல் - குவைதா அமைப்பின் முக்கியப் பிரமுகர் சிக்கினார்

அல் - குவைதா அமைப்பின் முக்கியப் பிரமுகர் சிக்கினார்

குவஹாத்தி:அல் - குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய முக்கியப் பிரமுகர் காஜி ரஹ்மான், அசாம் சிறப்பு அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டார். அல் - குவைதா அமைப்பின் கீழ், வங்கதேசத்தை மையமாக கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்பான அன்சருல்லாஹ் பங்களா குழுவின் முக்கிய உறுப்பினராக இருப்பவர் காஜி ரஹ்மான், 35. இவரையும், இவருடன் தொடர்பில் உள்ளவர்களையும், 'ஆப்பரேஷன் பர்கத்' என்ற திட்டத்தின் கீழ் அசாம் சிறப்பு அதிரடிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், வடகிழக்கு மாநிலமான அசாமின் கோக்ராஜ்ஹார் மாவட்டத்தில் பதுங்கிருந்த காஜி ரஹ்மான் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார்.இது தவிர பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 12 பேர், இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி