உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடிக்க தண்ணீர் தரலை நின்று போன திருமணம்

குடிக்க தண்ணீர் தரலை நின்று போன திருமணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சாம்ராஜ் நகர்: கர்நாடகாவில், குடிநீர் விஷயத்தில் ஏற்பட்ட தகராறில், திருமணமே நின்று போனது.கர்நாடக மாநிலம், தாவணகெரே ஜகளூரில் வசிப்பவர் மனோஜ் குமார், 27. துமகூரு பகுதியைச் சேர்ந்தவர் அனிதா, 22. இருவரும் பொறியியல் பட்டதாரிகள். இவர்களுக்கு குடும்பத்தினர் சம்மதத்துடன், திருமணம் நிச்சயமானது.சித்ரதுர்கா, ஹரியூரில் உள்ள மண்டபத்தில் நேற்று திருமணம் நடக்கவிருந்தது. நேற்று முன்தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இரண்டு குடும்பங்களின் உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்கள் என, ஏராளமானோர் மண்டபத்தில் கூடியிருந்தனர். திருமண சடங்குகள் நடத்தப்பட்டன.வரவேற்பு நிகழ்ச்சிக்கு சிலர் தாமதமாக வந்தனர். அவர்கள் உணவுக்காக அமர்ந்திருந்தனர். அப்போது கேட்டரிங் ஊழியர்கள், விருந்தினர்களுக்கு குடிநீர் கொடுக்கவில்லை. இது சலசலப்பாகி, இறுதியில் மணமகன், மணமகள் குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டது.இரவு துவங்கிய தகராறு, நேற்று காலையும் நீடித்தது. உறவினர்கள் எவ்வளவோ சமாதானம் செய்தும் பிரச்னை சரியாகவில்லை. நேற்று காலை, 10:30 மணிக்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது.ஆனால், மணமகள் அனிதா, திடீரென தனக்கு இந்த திருமணமே வேண்டாம் என கூறினார். அவரை சமாதானம் செய்ய உறவினர்கள் செய்த முயற்சி பலன் அளிக்கவில்லை.ஒரு கட்டத்தில், மணமகன் மனோஜ் குமாரும் திருமணம் வேண்டாம் என கூறியதால், கடைசி நேரத்தில் திருமணம் நின்று போனது. அனைவரும் மண்டபத்தில் இருந்து வெளியேறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அசோகன்
மார் 17, 2025 14:53

இது தண்ணீருக்காக மட்டும் வந்த சண்டையாக இருக்காது..... முன்பே இரு வீட்டாருக்கும் மனஸ்தாபம் இருந்திருக்கும், அதில் இந்த பிரச்சனை பெரிதாக்கபட்டிற்கும்.......... இருவரும் பிரிந்ததே நல்லது.....


எஸ் எஸ்
மார் 17, 2025 14:01

இருவருக்கும் இனி வேறு வரன் கிடைப்பது சற்று சிரமம்தான்


Nallavan
மார் 17, 2025 10:02

ஒருவகையில் மனம் ஒத்து போகாத திருமணம் நின்று போனதே நன்று


अप्पावी
மார் 17, 2025 09:31

அடடே... ஜல்ஜீவன் டிப்பார்ட்மென்ட்க்கு போன் செஞ்சிருக்கலாமே? அநியாயமா ஒரு கலியாணம் நின்னு போச்சே.


Anand
மார் 17, 2025 10:48

அங்கே உன்னோட தலைவனின் கூட்டுக்களவாணிகள் ஆட்சி தான் நடைபெறுகிறது.... அவரிடம் சொல்


கண்ணன்
மார் 17, 2025 10:53

அன்புள்ள அப்பாவி, தாங்கள் படிப்பறிவற்றவரோ? ஜல்ஜீவன் திட்டம் வீடுகளுக்குக் குடி நீர் வழங்கும் தின்டம் படிப்பறிவற்றவர்கள் நிறைந்த கட்சிகள் காங், கமயூ, திராவிடர்கள்


D.Ambujavalli
மார் 17, 2025 06:06

திருமண காண்ட்ராக்டர் இதில் அலட்சியமாக இருந்திருப்பார். அவசரத்துக்கு வெளியிலிருந்து குடிநீர் வரவழைப்பது அவ்வளவு கஷ்டமா? விருந்தினர் சற்றும் பொறுமையில்லாமல் வீண் சண்டை செய்திருப்பார்கள் அல்லது திருமணத்தில் பிரசினை செய்ய என்றே வந்திருப்பார்கள் இரு தரப்பினரும் விட்டுக்கொடுத்திருக்கலாம்


D.Ambujavalli
மார் 17, 2025 06:02

CATERING செய்ப்பவர்கள் தங்களுக்குக்கொடுக்கப்பட்ட எண்ணெய்க்காய்க்குத் தக்கபடி, அல்லது சற்று அதிகமாக என்று உணவும், குடிநீரும் கொண்டுவருவார்கள். எதிர்பாராது அதிக கூட்டம் வந்துவிட்டால் அவர்கள்தினறிப்போயிருப்பார்கள். திருமண வீட்டார் ஒரு டேங்கர் அல்லது SUPPLIER மூலம் ஏற்பாடு செய்திருக்கலாம் இந்த சிறிய பிரசனைக்கே பொறுமையிழப்பவர்கள் மணவாழ்க்கையில் சேராததே நல்லது


Kasimani Baskaran
மார் 17, 2025 04:24

இந்த சிறு தண்ணீர் விஷயத்துக்கே புத்தியை காட்டியவர்கள்... தமிழகம் என்றால் டாஸ்மாக்கை அடிப்படையாக வைத்து கத்திக்குத்து என்று ஆகியிருக்கும். ஒருவேளை இது காவிரியில் தண்ணீர் கொடுக்காததால் வந்த கர்ம பலனோ என்று சங்கிகள் சொல்ல வாய்ப்பு இருக்கிறது..


பேசும் தமிழன்
மார் 17, 2025 08:12

திருட்டு மாடல் ஆட்களுக்கு மூளையில் என்ன ஓடும் என்பது... உங்கள் கருத்தில் தெளிவாக தெரிகிறது.


தமிழன்
மார் 17, 2025 01:42

நடப்பதெல்லாம் நன்மைக்கே இதே திருமணமாகியபின் இப்படி நடந்திருந்தால் 2 பேரின் வாழ்க்கை அரோகரா மனிதன் பூமியில் நிம்மதியாக வாழ முடியாது போல கலிகாலம் என்ன செய்ய??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை