உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய காற்றழுத்த தாழ்வு நவ.,21ல் உருவாக வாய்ப்பு

புதிய காற்றழுத்த தாழ்வு நவ.,21ல் உருவாக வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'தென்கிழக்கு வங்கக்கடலில், வரும் 21ல் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வுத்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, அக்., 16ல் துவங்கியது. ஓரிரு நாட்களில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால், தமிழகத்தில் பருவமழை தீவிரமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, ஆந்திரா நோக்கிச் சென்றது. அதன்பின் உருவான, மற்றொரு காற்றழுத்த தாழ்வு மியான்மர் நோக்கிச் சென்றது. புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் தான், பருவமழை தீவிரமாகும். இச்சூழ்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில், வரும், 21ல் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய குறைவான வாய்ப்பே உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vasan
நவ 13, 2025 20:57

நிஜமாகவே பயமாக இருக்கிறது. நவம்பர் மாத மழை பலமாகவே இருக்கும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுர மாவட்ட ஏரிகளின் நீர் இருப்பு அதற்கு முன்பாகவே முழு கொள் அளவில் 70% அளவிற்கு குறைத்து வைய்க்க பட வேண்டும், பெரும் வெள்ளத்தை தவிர்க்க.


duruvasar
நவ 14, 2025 10:01

44 பட்சம் கொடுத்திருக்குமல்ல. பாலாஜி காப்பாத்திவிடுவார். ஏற்க்கனவே ஸ்டாலின் ஐயா வந்த புயலை மடைமாற்றம் செய்து ஆந்திராவுக்கு திருப்பிவிட்டு விட்டார். பயப்படாதீர்கள்.


முக்கிய வீடியோ