மேலும் செய்திகள்
ஐ.பி.ஓ.,
2 hour(s) ago
என்.எப்.ஓ.,
3 hour(s) ago
சபரிமலை பூஜைகளில் பாயாசம் பானகம் அப்பம் பஞ்சாமிர்தம்
3 hour(s) ago
சுவாமியே சரணம் ஐயப்பா (16) தினமும் ஒரு தகவல்
4 hour(s) ago
சபரிமலை: நிர்வாக முடிவுகளில் தாமதம் ஏற்படுவதால் சபரிமலையில் பாயாசத்துடன் கூடிய விருந்து வழங்குவது தள்ளி போகிறது. எனினும் இந்த விருந்து நடப்பு சீசனில் செயல்படுத்தப்படும் என தேவசம்போர்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சபரிமலையில் தற்போது நடைபெறும் அன்னதானத்தில் மதியம் வெரைட்டி ரைஸ் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள தேவசம் போர்டு இதை மாற்றி பாயாசத்துடன் கூடிய விருந்து வழங்க முடிவு செய்தது. இதை அமல்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்ட பின் இன்று (செவ்வாய்) முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வாழை இலை கொண்டு வருவதில் உள்ள சிரமத்தினால் ஸ்டீல் பிளேட்டுகளில் இவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தொடங்க இருந்த இந்நிகழ்வு சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏற்கனவே அன்னதானத்தில் மதிய உணவு தயாரிக்க வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து புதிய ஒப்பந்தம் போட வேண்டியுள்ளது. பாயாசத்துடன் கூடிய விருந்து வழங்க புதிய ஒப்பந்தம் வழங்கும்போது ஒரு நபருக்கு எத்தனை ரூபாய் வழங்குவது என்பதிலும் இன்னும் முடிவெடுக்க முடியவில்லை. இதில் தெளிவான முடிவு வருவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என்று சபரிமலை செயல் அலுவலர் பிஜூ கூறியுள்ளார். புதிய திட்டத்தின் படி மதிய உணவில் சோறு, பருப்பு, சாம்பார், அவியல், ஊறுகாய், துவரன், பப்படம், பாயாசம் ஆகியவை இடம்பெறும்.
2 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago