உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நண்பருக்காக கடன் வாங்கியவர் தற்கொலை

நண்பருக்காக கடன் வாங்கியவர் தற்கொலை

மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடின் தண்டிகெரே அருகே, நேற்று முன்தினம் மரத்தில் துாக்கிட்டு ஒருவர் சடலமாக தொங்கினார். வருணா போலீசார் விசாரித்தனர்.இறந்தவரின் மொபைல் போன் வீடியோவில், 'என் நண்பர் மணிகண்டனுக்கு கார் வாங்க, வங்கியில் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தேன். இரண்டு மாதங்கள் தவணை கட்டியவர், அதன் பின் கட்டவில்லை. இதனால் வங்கியினர், எனக்கு போன் செய்து தொந்தரவு கொடுக்க துவங்கினர். என் மனைவி, இரு குழந்தைகளை விட்டு பிரிகிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.தற்கொலை செய்து கொண்டவர், மல்லுபுரா கிராமத்தைச் சேர்ந்த சித்தேஷ், 40, என்பது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ram Moorthy
பிப் 05, 2025 04:25

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கடன்பட்டு விட்டால் கலங்கி கண்ணீர் விட்டு தான் அவமானம் பட வேண்டும் எவனுக்கும் கடன் வாங்கி அழியாதீர்கள்


SUBRAMANIAN P
பிப் 04, 2025 14:53

இங்க ஹிமுக காரன் அப்படிதான் இருப்பானுங்க.. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கோணும்..


Premanathan S
பிப் 04, 2025 12:33

இதுவெல்லாம் எந்த நாட்டில் நடக்கிறது என்றும் தெரிவியுங்கள் நண்பரே


Sivaprakasam Chinnayan
பிப் 04, 2025 22:01

Read news Properly then comment


Matt P
பிப் 05, 2025 08:42

நான் எழுதியிருந்தது அமெரிக்காவில் நடப்பதை.


Matt P
பிப் 04, 2025 11:05

இங்கே அவரவர் வருமானத்தை அவர்களே தேடி கொள்ள வேண்டும். குறிப்பிட்ட வயது வரை நன்றாக வளர்த்து விடுவார்கள். வயதாகி விட்டால் ஒழுங்காக வேலை செய்திருந்தால் ஓய்வூதியம் கிடைக்கும். ஒழுங்கான வருமானம் இருந்தால் கடன் கிடைக்கும் யாரும் யாருக்கும் கடன் கொடுப்பதில்லை. கிரெடிட் கார்டு உபயோகப்படுத்தலாம். பர்சனல் லோன்நும் கிடைக்கும். கட்டிய கணவனையும் நம்ப முடியாது வாக்குப்பட்ட மனைவியையும் நம்ப முடியாது. கூட பொறந்தவநையும் பொறந்தவளையும் நம்பமுடியாது. நண்பர் ஆனாலும் உணவு விடுதிக்கு போனால் கூட அவரவர் தேவைகளை வேண்டியவர்களே வாங்கி கொள்வார்கள். பண விஷயத்தில் எல்லோரும் கறார். யாராவது தெருக்களில் பிச்சை எடுத்தாலும் இரக்க உணர்வோடு வழங்குபவர்களும் இருக்கிறார்கள். வேலை இழந்து விட்டு உணவுக்கு திண்டாடிநாள் மாநில அரசு வேலை கிடைக்கும் வரை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உணவுக்கு வழி செயுது கொடுக்கிறார்கள். Food stamp என்று பெயர். Disable என்று யார் இருந்தாலும் அவர்களுக்கு முடிந்த வேலை கிடைக்க செய்கிறார்கள். வேலையே செய்ய முடியாதென்றால் வீட்டிற்கு வருமானம் கிடைக்க செய்கிறார்கள். எல்லா பாலினரும் ஒரே மாதிரி மதிக்கப்படுகிறார்கள். பெண்கள் என்பதற்காக இலவச பயணம் என்று எல்லாம் இல்லை. வரப்பு தகறாரு என்றெல்லாம் கிடையாது. நீதிமன்றம் வழியாக தான் நீதி கிடைக்கிறது. கட்ட பஞ்சாயத்து எல்லாம் இங்கே நடக்காது. அண்னன் தம்பி உறவு குடும்ப உறவு எல்லாம் நன்றாகவே போய் கொண்டிருக்கிறது. யாரும் உத்தமர்கள் இல்லை. தவறுகள் அன்கொன்றும் இன்கொன்றுமாக நடக்கும். தீதும் நன்றும் பிறர் தர வாரா. பெற்ற பிள்ளைகள் குறிப்பிட்ட வயதுக்கு பின் வீட்டுக்கு வந்து நீண்ட நாள் தங்கினால் கூட வாடகை வசூலித்து விடுவார்கள். அளவுக்கு மீறிய வருமானம் இருந்தால் எப்படியும் பிள்ளைகளுக்கு தான்ஏ பிற்காலத்தில். அதனால் வசூலிக்காமல் இருப்பார்கள்.இங்கே நிறைய homeless பிச்சை எடுப்பவர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு குளிக்க இலவசமாக உணவு உண்ண Nashville mission என்ற அமைப்பு இருக்கிறது.என்ன தான் அன்பு அடுத்தவர்களிடம் அன்பு வைத்திருந்தாலும் வாழ்க்கையில் கவனம் தேவை. நம்மையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


VENKATASUBRAMANIAN
பிப் 04, 2025 08:14

சரியான கோழை. நண்பன் என்று கூறும் கயவனை போலீஸில் பிடித்து கொடுக்காமல் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனைவி மக்களை பற்றி சிந்திக்க வில்லை.


Venkatesan Ramasamay
பிப் 04, 2025 13:26

சரியாய் சொன்னீங்க ...ஏன் ? இவன் சாகவேண்டும் ...


சமீபத்திய செய்தி